ரூ.2,670 கோடியில் சென்னை டூ கடலூர் ரயில் பாதை… ஈசிஆர் ரூட் மாறுதா? லேட்டஸ்ட் அப்டேட்!

சென்னை முதல் கடலூர் வரை கிழக்கு கடற்கரையை ஒட்டி ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும் என்பது 16 ஆண்டுகால கனவு திட்டம். வங்காள விரிகுடாவில் இருந்து வீசும் ஜில்லென்ற காற்று, பச்சை பசேலென காணப்படும் ரம்மியமான சூழல். இத்தகைய சூழலில் ஒரு ரயில் பயணம். நினைத்து பார்க்கும் போது பலரும் குதூகலமாகி விடுவர்.

சென்னை டூ கடலூர் ரயில் பாதைஅதுவும் ஈசிஆர் வழியாக மாமல்லபுரம், புதுச்சேரி பயணம் என்றால் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இதற்கான நிலம் அளவீடு தொடர்பான பணிகளுக்கு அச்சாரம் போடப்பட்ட நிலையில், அதன்பிறகு அப்படியே கிடப்பில் விழுந்தது. இதையடுத்து ஒவ்வொரு ஆட்சி மாறும் போதும் கோரிக்கைகளும், கடிதங்களும் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் நடந்தன.​மாமல்லபுரம், புதுச்சேரி வழியாகஇந்நிலையில் 2023 ஆகஸ்ட் மாதம் ஒரு நல்ல விஷயத்தை மத்திய அரசு கூறியிருக்கிறது. மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 179.28 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்னையில் இருந்து மாமல்லபுரம், மரக்காணம், புதுச்சேரி வழியாக கடலூர் வரை புதிதாக ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
​விழுப்புரம் டூ புதுச்சேரி சிக்கல்இதற்காக தற்போதைய மதிப்பீட்டின் படி 2,870 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது முதல்கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பணிகளை தொடங்குவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. ஏனெனில் விழுப்புரம் முதல் புதுச்சேரி வரையிலான வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருக்கும் வழித்தட திட்டத்தை மாற்ற வேண்டும் என்று புதுச்சேரி அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
​இரட்டை வழித்தடம்மேலும் புதுச்சேரி முதல் கடலூர் வரை இரட்டை வழித்தடம் அமைக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான கூடுதல் செலவை புதுச்சேரி அரசே ஏற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினோம். ஆனால் ஏற்க மறுத்துவிட்டனர். இதற்கான மாற்று ஏற்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. புதிய வழித்தடத்தில் ரயில் பாதை அமைக்க முதல்கட்டப் பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
​ஈசிஆர் மக்கள் கோரிக்கைஇதற்கிடையில் சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக கடலூர் வரை செல்லும் ரயில் வழித்தடத்தின் தொடக்கப் புள்ளி செங்கல்பட்டு அல்லது தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் ஒன்றாக இருக்கலாம் எனப் பேச்சு அடிபடுகிறது. அப்படி இருந்தால் ஓ.எம்.ஆர், ஈசிஆர் வழியாக ரயில் செல்லாது. இது பெரும் ஏமாற்றமாக அமையும்.
விரிவான திட்ட அறிக்கைஎனவே பெருங்குடியில் இருந்து ஓ.எம்.ஆர், ஈ.சி.ஆர் வழியாக மாமல்லபுரம் செல்லும் வகையில் வழித்தடம் அமைக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான திட்ட அறிக்கை வெளியானால் தான், உண்மை நிலவரம் தெரிய வரும் எனக் கூறப்படுகிறது. ஈசிஆர் மக்களின் கனவை கலைத்து விடாதீர்கள் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.