வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மூணாறு: கேரள மாநிலம் மூணாறு அருகே தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் துணை தலைவர் அஷ்ரப்புக்கு சொந்தமான தங்கும் விடுதியை அமலாக்கத் துறையினர் கையகப்படுத்தினர்.
எர்ணாகுளம் மாவட்டம் மூவாற்றுபுழாவை சேர்ந்த அஷ்ரப் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில துணைத் தலைவர் பொறுப்பு வகித்தவர்.
அவர் பல்வேறு குற்றச் சம்பவங்களிலும், சட்ட விரோத செயல்களிலும் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார்.
இவர் துணைத் தலைவராக பொறுப்பு வகித்த போது கருப்பு பணம் பரிமாற்றமும் நடந்துள்ளது. அப்பணத்தை கொண்டு மூணாறு அருகே விரிபாறை பகுதியில் அஷ்ரப் தங்கும் விடுதி கட்டியதாக தெரிய வந்துள்ளது.
அதனால் கருப்பு பணம் தடுப்பு சட்டத்தில் தங்கும் விடுதி, 6.759 ஏக்கர் நிலம் ஆகியவற்றை அமலாக்கத்துறையினர் கையகப்படுத்தினர். தங்கும் விடுதியில் இருந்து முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
லைசென்ஸ் ரத்து:
தங்கும் விடுதி போதிய ஆவணங்கள் இன்றி செயல்படுவதாகவும் புகார் எழுந்தது. டி.எஸ்.பி. அலெக்ஸ் பேபி தலைமையில் போலீசார் இதுகுறித்து மாங்குளம் ஊராட்சி செயலர் கார்த்திகேயன், எழுத்தர் ஆகியோரிடம் கடந்த மே மாதம் விசாரணை நடத்தினர்.
அதில் போதிய ஆவணங்கள் இன்றி தங்கும் விடுதிக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டது தெரியவந்ததால் ‘லைசென்ஸ்’ ரத்து செய்யப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement