"ஆசைக்கு இணங்க மாட்டாயா..?" குடும்பத்தையே ஆற்றில் வீசிய கொடூரன்.. சினிமா பாணியில் உயிர் தப்பிய சிறுமி

அமராவதி:
தனது காம இச்சைக்கு இணங்க மறுத்த பெண்ணை அவரது குழந்தைகளுடன் ஆற்றில் தூக்கியெறிந்த கொடூர இளைஞனை ஆந்திரா போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தில் சினிமா பாணியில் உயிர் பிழைத்த சிறுமி சொன்ன தகவல்களின் அடிப்படையிலேயே அந்த இளைஞனை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். ஆந்திராவையே அலற வைத்துள்ள இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து இப்போது பார்க்கலாம்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் புப்பலா சுஹாசினி (36). இவருக்கு திருமணமாகி 13 வயதில் ஒரு மகளும், 1 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இவரது கணவர் வெளியூரில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்களின் வீட்டுக்கு அருகே வசித்து வரும் உலவா சுரேஷ் (28), புப்பலா சுஷாஷினியின் குழந்தைகளிடம் அன்பாக பழகுவதும், அவர்களுக்கு மிட்டாய்கள், பொம்மைகளை வாங்கி தருவதுமாக இருந்திருக்கிறார்.

இதை பார்த்த சுஹாஷினிக்கு, உலவா சுரேஷ் மீது பிரியம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுரேஷ் அடிக்கடி சுஹாஷினியின் வீட்டுக்கு வந்து போவதை வழக்கமாக மாற்றினார். இதனால் ஒருகட்டத்தில், அவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துள்ளது. இருவரும் தனிமையில் உல்லாசமாக இருக்கும் வரை அவர்களின் உறவு சென்றது.

உறவை துண்டித்ததால் ஆத்திரம்:
இதனிடையே, கணவனுக்கு துரோகம் செய்கிறோமே என்ற உருத்தல் சுஹாஷினிக்கு ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக சுரேஷுடன் பழகுவதை நிறுத்தினார். அவர் வீட்டுக்கு வந்தால் ஏதாவது காரணம் சொல்லி திருப்பி அனுப்பி வந்திருக்கிறார் சுஹாசினி. இது சுரேஷுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஒருகட்டத்தில் சுஹாசினியை தீர்த்துக் கட்ட முடிவு செய்த சுரேஷ், அவரை சில சில தினங்களுக்கு முன்பு போனில் தொடர்பு கொண்டு பேசினா். அப்போது, இனி நமக்குள் உடல் ரீதியாக உறவு இருக்க வேண்டாம் என்றும் நண்பர்கள் போல பழகலாம் எனவும் அவர் கூறியுள்ளார். சுரேஷின் வார்த்தையை நம்பிய சுஹாசினியும் அதற்கு சம்மதித்தார்.

பக்கா ஸ்கெட்ச்:
இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு சுஹாசினியின் வீட்டுக்குச் சென்ற சுரேஷ், “கோதாவரி ஆற்றை இந்த நேரத்தில் பார்த்தால் நன்றாக இருக்கும். உடனே கிளம்புங்கள்” எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சுஹாசினியும் தனது குழந்தைகளுடன் அவருடன் காரில் புறப்பட்டுள்ளார். அப்போது கோதாவரி பாலம் வந்ததும் அனைவரும் இறங்கியுள்ளனர். இதையடுத்து, சசெல்பி எடுப்போம் எனக் கூறி பாலத்தின் கைப்பிடி அருகே சுஹாசினியை சுரேஷ் அழைத்து சென்றான்.

ஆற்றில் தள்ளிவிட்ட கொடூரன்:
அப்போது செல்பி எடுப்பது போல பாவனை செய்த சுரேஷ், கண்ணிமைக்கு நேரத்தில் சுஹாசினியை ஆர்ப்பரிக்கும் கோதாவரி ஆற்றில் தள்ளிவிட்டான். இதில் அவரும், அவரது 1 வயது பெண் குழந்தையும் ஆற்றில் விழுந்தனர். இதை பார்த்து விக்கித்து நின்ற சுஹாசினியின் மூத்த மகளான கீர்த்தனாவையும் கொடூரன் சுரேஷ், ஆற்றில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து சென்றான்.

சென்ட்ரல் டூ எக்மோருக்கு ரூ.1800 வேண்டுமாம்.. வடமாநிலத் தொழிலாளர்களை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் கைது

உயிரை காப்பாற்றிய பைப்:
ஆனால் அதிர்ஷ்டவசமாக சிறுமி கீர்த்தனா பாலத்துக்கு கீழே இருந்த பிளாஸ்டிக் பைப்பை பிடித்துக் கொண்டார். பின்னர் அந்தரத்தில் தொங்கியபடியே தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து போலீஸுக்கு போன் செய்து நடந்த விவரங்களை கூறியுள்ளார். இதையடுத்து 5 நிமிடத்தில் அங்கு வந்த போலீஸார், பைப்பில் தொங்கி கொண்டிருந்த சிறுமி கீர்த்தனாவை கயிறு மூலமாக மீட்டனர். பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில் கொடூரன் சுரேஷை போலீஸார் கைது செய்தனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சுஹாசினி மற்றும் அவரது 1 வயது குழந்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.