கொரோனா வார்டுக்கு சென்றவர் ஸ்டாலின்.. மாஸ்க் போடாமலேயே சென்றவர் உதயநிதி ஸ்டாலின்.. தயாநிதி மாறன் பேச்சு

சென்னை:
“மக்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக, தனது உயிரையும் துச்சமாக நினைத்து கொரோனா வார்டுக்குள் நமது முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்றார். ஆனால் அதை விட மேலாக, மாஸ்க் கூட அணியாமல் கொரோனா வார்டுக்குள் சென்றவர் தான் நமது அமைச்சர்

” என்று திமுக எம்.பி.

புகழாரம் சூட்டினார்.

மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் கட்சி சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் ஒருபகுதியாக, தனது சேப்பாக்கம் தொகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி. தயாநிதி மாறனும் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:

கருணாநிதியும் சரி.. முதல்வர் ஸ்டாலினும் சரி.. மக்களுக்கு தரக்கூடிய மரியாதையில் இருந்து எள்ளளவு கூட அவர்கள் விலகியது கிடையாது. குறிப்பாக, அடித்தட்டு மக்கள் மீது பேரன்பை வைத்திருப்பவர் முதல்வர் ஸ்டாலின். தற்போது அவர்களின் பாதையை பின்பற்றி அவர்களை போலவே மக்கள் மீது மதிப்பு வைத்திருக்கிறார் எங்களின் எதிர்காலமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள். இதற்கு ஒரு சிறிய உதாரணத்தை கூறுகிறேன். கொரோனா காலத்தில் நோயாளிகளை கண்டு மருத்துவர்களே பயந்து கொண்டிருந்தனர். ஆனால், எதற்கும் அச்சப்படாமல் தூய்மைப் பணியாளர்களை சென்று சந்தித்து அவர்களுக்கு உதவிகளை செய்தார் உதயநிதி ஸ்டாலின்.

அதை மட்டுமா அவர் செய்தார்? முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு சென்றிருந்த போது அங்கிருந்த கொரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். நாங்கள் எல்லாம் வீட்டை விட்டே வெளியே வரவே பயந்து கொண்டிருந்தோம். உயிர் பயம் எங்களுக்கு இருந்தது உண்மைதான். ஆனால் முதல்வரோ மக்களை பார்த்தே தீர வேண்டும் என கொரோனா வார்டுக்கு சென்றார். அவராவது மாஸ்க் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருந்தார்.

ஆனால், உதயநிதி ஸ்டாலினோ ஒரு மாஸ்க் கூட அணியாமல் கொரோனா வார்டுக்குள் சென்றார். எவ்வளவு துணிச்சல் பாருங்கள். நான் அவரது கையை பிடித்து இழுத்து, “தயவுசெய்து போகாதீர்கள்” என்று தடுத்தேன். ஆனால் அவர் என் பேச்சை கேட்கவே இல்லை. நேராக கொரோனா வார்டுக்குள் சென்றுவிட்டார். தனது தொகுதி மக்கள் மருத்துவமனையில் இருக்கிறார்கள்.. தான் நேரில் சென்றால் இன்னும் சிறப்பான சிகிச்சைகளை மருத்துவர்கள் வழங்குவார்கள் என்ற எண்ணம்தான் அதற்கு காரணம். இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.