கீவ்: உக்ரைன் அதிபர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ரஷ்ய பெண் உளவாளியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.ரஷ்ய -உக்ரைன் போர் கடந்த ஓராண்டுக்கு மேல் நடந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் தெற்கு மாகாணங்களில் கனமழை, வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மைகோலாவிவ் என்ற பகுதியில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி பார்வையி்ட்டார்.சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரை பாதுகாப்புபடையினர் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் ரஷ்ய பெண் உளவாளி என்பதும், ஜெலன்ஸ்கியை வேவு பார்த்தது மட்டுமின்றி, அவர் மீது தாக்குதல் நடத்திடவும் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்தது. அவரிடம் பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement