Jailer: பெங்களூருக்கு படையெடுக்கும் தலைவர் ரசிகர்கள்: 'ஜெயிலர்' ஆட்டம் ஆரம்பம்.!

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் அதிகாலை நான்கு மணி காட்சியை பார்க்க தமிழ்நாட்டை சார்ந்த ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஜெயிலர்ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் படு ஜோராக நடந்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப்படம் உருவாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீசாகவுள்ள இந்தப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி காலை 9 மணியில் இருந்தே துவங்கப்படவுள்ளது. அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை இதனால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.
நெல்சன் திலீப்குமார்’அண்ணாத்த’ படத்தின் தோல்விக்கு பிறகு நெல்சனுடன் இணைந்தார் ரஜினி. கோலமாவு கோகிலா, பீஸ்ட் போன்ற டார்க் காமடி படங்களை இயக்கியவர் நெல்சன். இவரது இயக்கத்தில் முதன்முறையாக ரஜினி நடிக்கிறார் என்ற போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படத்திற்கு குவிந்த நெகட்டிவ் விமர்சனங்களை தொடர்ந்து ஜெயிலரை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார்.
ஜெயிலர் தரிசனம்இந்நிலையில் அண்மையில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் டிரெய்லர் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பினை பல மடங்கு எகிற செய்துள்ளது. முத்துவேல் பாண்டியனாக அதிரடி ஆக்ஷனில் கலக்கியுள்ளார் ரஜினி. அதே போல் நெல்சனின் டார்க் காமெடியும் படத்தில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளதும் டிரெய்லர் மூலம் உறுதியாகியுள்ளது. இதனால் ஆகஸ்ட் 10 தேதி ஜெயிலரை தரிசனத்தை காண ரசிகர்கள் வெறித்தனமாக உள்ளனர்.
பெங்களூரில் அதிகாலை காட்சிஇந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்திற்கான அதிகாலை நான்கு மணி காட்சிக்கு தமிழகத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில் கர்நாடக மாநிலத்தில் ‘ஜெயிலர்’ படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. காலை ஆறு மணியில் இருந்து அங்கு முதல் காட்சி திரையிடப்படவுள்ளது. மேலும் பெங்களூர் முகுந்தா, பாலாஜி, பூர்ணிமா உள்ளிட்ட திரையரங்குகளில் அதிகாலை நான்கு மணியில் இருந்தே ஷோ துவங்கவுள்ளது.
படையெடுக்கும் ரசிகர்கள்இதனையடுத்து தமிழ்நாட்டை சார்ந்த ரசிகர்கள் பெங்களூரில் அதிகாலை காட்சிகளை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக வழக்கத்தை விட டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. அத்துடன் தமிழக ரசிகர்கள் பெங்களூர் வந்து படம் பார்க்க விரும்புவதை தெரிந்து கொண்ட சிலர் டிக்கெட்டை ரூபாய் 5,000 வரை விற்பனை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.