jailer: ரஜினி ஒருவர் மட்டும்தான் நிரந்தர சூப்பர்ஸ்டார்..சண்டையை முடித்துவைத்த விஜய்..!

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து தான் தற்போது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. ரஜினி ரசிகர்கள் ஒருபக்கம் தமிழ் சினிமாவில் நிரந்தர சூப்பர்ஸ்டார் ரஜினி மட்டும் தான் என்கின்றனர். மறுபக்கம் விஜய் ரசிகர்களோ, தளபதி தான் தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர்ஸ்டார் என்கின்றனர்.

இதன் காரணமாகவே இவர்கள் இருவரின் ரசிகர்களுக்குள் மோதல்கள் வெடித்து வருகின்றன. மேலும் இந்த மோதலை பற்றி பலரிடமும் கருத்து கேட்கப்பட்டு வருகின்றது. பிரபலங்கள் சொல்லும் கருத்துக்களும் ரசிகர்களிடம் சலசலப்பை தான் ஏற்படுத்தி வருகின்றது.

சூப்பர்ஸ்டார் பட்டம்

இந்நிலையில் ரஜினியின் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படத்தில் இருந்து வெளியான ஹுக்கும் பாடல் இவர்களின் மோதலை மேலும் அதிகரித்தது. இப்பாடலில் சூப்பர்ஸ்டார் பட்டம் பற்றிய வரிகள் தான் இந்த மோதலுக்கு காரணமாக அமைந்தது.

Jailer: அனிருத் காதலிக்க வாய்ப்பே இல்லை..ஏன் தெரியுமா ? ரஜினி ஓபன் டாக்..!

இதைத்தொடர்ந்து ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசும்போது, கழுகு, காக்க என்ற குட்டி கதையை கூறினார். இதிலும் சிலர், ரஜினி தன்னை கழுகு என்றும், விஜய்யை காக்கா என்றும் கூறியதாக சிலர் இணையத்தில் கிளப்பிவிட விஜய் ரசிகர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றனர். இதன் காரணமாக இவர்களின் மோதலுக்கு ஒரு முடிவே இல்லாமல் போய்விட்டது.

விஜய் பேச்சு

இந்நிலையில் இந்த மோதலை கட்டுப்படுத்த விஜய் பல மேடைகளில் சூப்பர்ஸ்டார் பற்றி பேசிய விஷயங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் விஜய்யிடம் பலமுறை சூப்பர்ஸ்டார் பற்றிக்கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், தமிழ் சினிமாவில் என்றைக்கும் ரஜினி ஒருவர் தான் சூப்பர்ஸ்டார் என கூறியுள்ளார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

மேலும் தனக்கு ரசிகர்கள் வைத்த தளபதி என்ற பட்டமே போதும், சூப்பர்ஸ்டார் பட்டம் எல்லாம் வேண்டாம் எனவும் கூறினார் விஜய். இதை சிலர் இணையத்தில் ஷேர் செய்து விஜய் ஒருபோதும் சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்பட்டதில்லை. எனவே ரசிகர்கள் இந்த மோதலை கைவிட்டுவிட்டு அனைவரையும் ரசித்து ஆதரிக்கவேண்டும் என பொதுவான சிலர் வேண்டுகோள் வைத்து வருகின்றனர். இதையடுத்து இந்த மோதல் தற்போது ஒரு முடிவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.