வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ‘சிவிங்கி புலிகள் இறப்பு விவகாரத்தில் மத்திய அரசைக் கேள்வி கேட்க எந்த காரணமும் இல்லை’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.நம் நாட்டில் அதிக எண்ணிக்கையில் இருந்த சிவிங்கி புலிகள் பல ஆண்டுகளுக்கு முன் முற்றிலும் அழிந்தன.
அவற்றை மீண்டும் வளர்க்கும் திட்டத்தை முன்னெடுத்த மத்திய அரசு, தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவிலிருந்து எட்டு சிவிங்கி புலிகளையும், தென் ஆப்ரிக்காவில் இருந்து, 12 சிவிங்கி புலிகளையும் இடமாற்றம் செய்தது.
![]() |
இவை அனைத்தும், மத்திய பிரதேசம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தன.இதற்கிடையே, பெண் சிவிங்கி புலி ஜுவாலா, கடந்த மார்ச்சில் நான்கு குட்டிகளை ஈன்றது. இதையடுத்து, மொத்தமாக 24 சிவிங்கி புலிகள் தேசிய பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த ஐந்து மாதங்களில், நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் மூன்று குட்டிகள் உட்பட, ஒன்பது சிவிங்கி புலிகள் அடுத்தடுத்து உயிரிழந்தது வன ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், சிவிங்கி புலிகள் அடுத்தடுத்து இறந்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது.அப்போது, ‘சிவிங்கி புலிகள் தொடர் உயிரிழப்பு விவகாரத்தில் மத்திய அரசைக் கேள்வி கேட்க எந்த காரணமும் இல்லை’ என நீதிபதிகள் கூறினர்.முந்தைய வழக்கில், சிவிங்கி புலிகள் உயிரிழப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், குனோ தேசிய பூங்காவில் தற்போது உள்ள 15 சிவிங்கி புலிகளை பாதுகாக்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement