ஹைதராபாத் : தெலுங்கானாவைச் சேர்ந்த பிரபல நாட்டுப்புற பாடகரான கட்டார், 77, உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
பாடகராக அறியப்பட்ட இவர், நக்சல் இயக்க செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வந்தார். அடர்ந்த வனப்பகுதிகளில் மறைந்து வாழ்ந்து வந்த இவர், பின், அந்த இயக்கத்தில் இருந்து விலகி, தெலுங்கானா மாநில உருவாக்கப் போராட்டத்தில் பங்கெடுத்தார். அத்துடன், தன் பாடல்கள் வாயிலாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம், கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்ட கட்டார், ஹைதராபாதில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் காலமானார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement