Vijay Sethupathi: இனி அதற்கு வாய்ப்பே இல்லை.. விஜய் சேதுபதி படம் குறித்து சேரன் அதிர்ச்சி தகவல்.!

தமிழ் சினிமாவில் கைவசம் பல படங்களை வைத்துக்கொண்டு பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. பிறமொழி படங்களிலும் நடித்து வரும் இவர் சமீப காலமாக தொடர்ச்சியாக வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதி குறித்து இயக்குனர் சேரன் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘விக்ரம்’ படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி தற்போது ஷாருக்கானுக்கு வில்லனாக ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், இந்தி மொழியில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ள இந்தப்படத்தை அட்லீ இயக்கியுள்ளார். நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோரும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். அத்துடன் கத்ரீனா கைப் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வெளியாகும் படங்கள் அண்மைக்காலமாக பெரிதான வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தற்போது ஹீரோவாக ஆறுமுக குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றோம்’ படத்தை இயக்கியவர். இதன் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடந்து வருகிறது. இதனையடுத்து நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் தனது 50 வது படத்திலும் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் சேரன் படம் ஒன்று இயக்குவதாக தகவல்கள் வெளியானது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சமயத்திலே இதுக்குறித்து பேசியிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததும் இந்தப்படம் துவங்கும் என கூறப்பட்டது. ஆனால் அந்தப்படம் துவங்குவதற்கான எந்த அறிகுறியும் இதுவரை தெரியவில்லை.

Aishwarya Rajinikanth: இது தற்செயலானது அல்ல.. ஆரம்பித்த இடத்திலே முடிந்தது: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.!

இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சேரனிடம் விஜய் சேதுபதியின் படம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘இனிமேல் அது பண்ண முடியாது. அவரின் நிலை உயர்ந்துவிட்டது. அவருக்கான கதை மாற்றப்பட்ட வேண்டும். அத்துடன் அவர் மிகவும் பிசியாகவும் இருக்கிறார். அதனால் அந்தப்படம் எடுக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார் சேரன்.

விஜய் சேதுபதியின் படம் குறித்து சேரன் இவ்வாறு தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் ‘விடுதலை 2’ படத்திலும் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி. வெற்றிமாறன் இயக்கும் இந்தப்படத்தில் வாத்தியாராக நடிக்கிறார். ‘விடுதலை’ முதல் பாகத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பினை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Jailer: ரிலீசுக்கு முன்பே வசூலை குவிக்கும் ‘ஜெயிலர்’: மாஸ் காட்டும் முத்துவேல் பாண்டியன்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.