சென்னை: நடிகர் யோகிபாபு அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். ஹீரோவாகவும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக வெளியாகவுள்ள ரஜினியின் ஜெயிலர் படத்திலும் யோகிபாபு நடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது. பாலிவுட்டிலும் ஷாருக்கானின் ஜவான் படத்திலும் நடித்துள்ளார் யோகிபாபு. இவருக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ளது.
