எடப்பாடியை படு மோசமாக விமர்சித்த ஸ்டாலின்: என்ன முதல்வர் இப்படி இறங்கிட்டாரு?

குடிமைப் பணி அதிகாரிகளை நியமித்தல், பணி மாறுதல் செய்தல் ஆகியவை தொடர்பான அதிகாரத்தை டெல்லி முதலமைச்சரிடம் இருந்து பறித்து துணை நிலை ஆளுநரிடம் வழங்கும் வகையில் டெல்லி அவசர சட்ட மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேறியது.

சுமார் எட்டு மணி நேரம் நடைபெற்ற விவாதத்தை தொடர்ந்து மசோதா தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மசோதா வாக்கெடுப்பில் கலந்துகொள்ள ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் அவைக்கு வந்திருந்தனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்திருந்து விவாதத்தில் கலந்து கொண்டார். மாநிலங்களவை பக்கம் அதிகம் தலைகாட்டாத இசையமைப்பாளர் இளையராஜாவும் நேற்று ஆஜரானார். பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு பக்கமும் இணையாத ஒரிசா நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், ஆந்திரா ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு அளித்தன.

தமிழ்நாட்டிலிருந்து அதிமுகவும் டெல்லி அவசர சட்ட மசோதாவுக்கு ஆதரவு அளித்தது. இதனால் மசோதா வாக்கெடுப்பில் ஆதரவாக 131 எம்பிக்கள் வாக்களித்த நிலையில், 102 எம்.பிக்கள் எதிராக வாக்களித்தனர்.

சீமான் பேசியது நல்லது இல்ல கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

அதிமுக இதற்கு ஆதரவு அளித்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர்

அதிமுகவையையும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக தாக்கி பதிவிட்டுள்ளார்

எடப்பாடி பழனிசாமியை பலமுறை விமர்சித்து ஸ்டாலின் பேசியிருந்தாலும் தடித்த வார்த்தைகளால் அவர் பதிவிட்டிருப்பது கவனம் பெற்று வருகிறது.

29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச் செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள் என்று ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று மாதமாக மணிப்பூர் பிரச்சினை கொழுந்துவிட்டு எரியும் நிலையில் அதை அணைக்க முன்வராமல் , டெல்லியைச் சிதைக்கத் பாஜக துடிப்பதாகவும் இதை மக்கள் நன்கு உணர்ந்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்தைக் குலைக்கும் இந்த மசோதாவை ஆதரித்தது தனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.