பொல்கஹவலயிலிருந்து இரத்மலானை வரை பயணிக்கும் புகையிரதம், வில்வத்த – மீரிகம புகையிரத நிலையங்களுக்கு இடையில் உள்ள புகையிரதக் கடவையினூடாகச் செல்லும் பாதையில் கன்டைனர் ஒன்றுடன் மோதியதில், மீரிகம – அம்பேபுஸ்ஸ புகையிரதப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது தனி வழிப் போக்குவரத்துப் பாதையாக திறக்கப்பட்டுள்ளது என்று புகையிரத மேலதிக பொதுமுகாமையாளர் வீ.எஸ். பொல்வத்தகே தெரிவித்தார்.
இந்த புகையிரத விபத்து தொடரபாக, இன்று (09) அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த விபத்து காரணமாக பிரதான வீதியின் காலை அலுவலக ரயில்கள் அனைத்தும் தாமதமாகவே பயணித்தன.
இதனால் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதனை உடனடியாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.