கேரளாவில் ஓடும் பஸ்சில் இரண்டு இளம் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஏட்டு மற்றும் ஏ.டி.ஜி.பி., அலுவலக ஊழியர் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் காஞ்சியார் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் 39. திருவனந்தபுரம் ஏ.டி.ஜி.பி., அலுவலகத்தில் அமைச்சுப்பணியாளராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் கோட்டயத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார். முன் சீட்டில் அமர்ந்திருந்த இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அப்பெண் கண்டக்டரிடம் புகார் செய்தார். சதீைஷ சக பயணிகள் மித்ராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அவர் கைது செய்யப்பட்டார்.
பத்தனம் திட்டா மாவட்டம் கோந்நி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிபவர் சமீர் 39. இவர் பட்டணம்திட்டாவில் இருந்து அடூர் சென்ற அரசு பஸ்சில் பயணித்த போது முன் இருக்கையில் அமர்ந்திருந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்து இளம்பெண் புகார் செய்தார். இதை தொடர்ந்து சமீரை போலீசார் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement