வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ எனப்படும் சூதாட்ட விளையாட்டு, குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு, 28 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கும் வகையில், ஜி.எஸ்.டி., சட்டங்களில் மாற்றம் செய்ததற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், சமீபத்தில், 51வது ஜி.எஸ்.டி., கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடந்தது. கூட்டத்தில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் பங்கேற்றனர்.
![]() |
இக்கூட்டத்தில், ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோக்கள், குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு, 28 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட ஜி.எஸ்.டி., சட்டங்களில் திருத்தம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், ஐ.ஜி.எஸ்.டி., எனப்படும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., சட்டம் – 2017-ல், ஒரு குறிப்பிட்ட விதியை சேர்க்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
இதன்படி, வெளிநாட்டில் இருந்து ஆன்லைன் விளையாட்டை வழங்கும் ஒரு நிறுவனம், ஜி.எஸ்.டி., பதிவு செய்து, வரி செலுத்தவும் வேண்டும். இந்த திருத்தங்கள், வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன.
இதற்கிடையே, ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிந்துரையின்படி, மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில், திருத்தம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி., சட்டங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த திருத்தப்பட்ட சட்டங்கள், நடப்பு பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement