மும்பையில் பெருசா சம்பவம் பண்ணும் அதானி… அந்த 2 திட்டங்கள்…. என்னென்ன தெரியுமா?

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. புதிது புதிதாக மக்களின் வருகையும், தொழிற்சாலைகள், நிறுவனங்களின் கட்டமைப்பும் வேற லெவலுக்கு நகர்த்தி கொண்டு செல்கின்றன. இதனால் மின்சாரப் பயன்பாடும் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த மே 31ஆம் தேதி நிலவரப்படி பார்த்தால் 3,968 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது.

மும்பையின் மின்சாரத் தேவை

அதுவே ஜூன் 1ல் 3,971 மெகாவாட் ஆகவும், ஜூன் 9ல் 4,129 மெகாவாட் ஆகவும் மின்சார தேவை கிடுகிடுவென அதிகரித்தது. வரும் 2024-25ல் மும்பையின் மின்சார பயன்பாடு 5,000 மெகாவாட் அளவிற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்கள், எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்கள் ஆகியவை ஆண்டிற்கு 150 மெகாவாட் அளவிற்கு மின் தேவையை அதிகரித்து கொண்டே செல்கின்றன.

டிரான்ஸ்மிஷன் நெட்வொர்க்

மேலும் தற்போது பயன்பாட்டில் உள்ள டிரான்ஸ்மிஷன் நெட்வொர்க் ஆனது தனது முழுமையான கொள்ளளவை விரைவில் எட்டவுள்ளது. இதில் சிக்கலை ஏற்படுத்தாமல் மேம்படுத்தப்பட்ட நெட்வொர்க்கிற்கு அப்கிரேட் ஆக வேண்டியது அவசியமாகிறது. இந்நிலையில் கர்கார் – விக்ரோலி திட்டம் (400 கிலோவாட் ட்ரான்ஸ்மிஷன் லைன்) மற்றும் குடாஸ் – ஆரே திட்டம் (320 கிலோவாட் ட்ரான்ஸ்மிஷன் லைன்) ஆகிய இரண்டு புதிய திட்டங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

களமிறங்கிய அதானி குழுமம்

இதன்மூலம் மும்பை நகரின் எதிர்கால மின் தேவையை பூர்த்தி செய்ய முடிவு செய்துள்ளனர். இதில் குடாஸ் – ஆரே திட்டத்தை அதானி எனர்ஜி சொல்யூசன்ஸ் லிமிடெட் (AESL) நிறுவனம் செயல்படுத்த மகாராஷ்டிர மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து 5,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த முடிவு செய்துள்ளனர்.

நேரடி மின்னோட்ட திட்டம்

இந்த திட்டத்தின் மூலம் 1,000 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கூடுதலாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உயர் மின்னழுத்த நேரடி மின்னோட்டம் திட்டம் (High Voltage Direct Current) என்பது கவனிக்கத்தக்கது. இந்த மின்சாரம் 320 கிலோவாட் ட்ரான்ஸ்மிஷன் லைன் மூலம் மும்பை நகருக்கு தடையற்ற மின்சாரத்தை அளிக்கவுள்ளது.

முன்னோடி தொழில்நுட்பம்

இந்த திட்டத்தின் மூலம் மாநில மற்றும் தேசிய கிரிட்களுக்கு இண்டர்பேஸ்களை வழங்க முடியும். அதுமட்டுமின்றி உயர் மின்னழுத்த நேரடி மின்னோட்ட தொழில்நுட்பமானது பயன்பாட்டில் உள்ள மற்ற தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு நண்பன்

மேலும் மின்சார விநியோக தொடரமைப்பை நிலைப்படுத்த பெரிதும் உதவுகிறது. இதுதவிர மின்சாரம் எந்த ஒரு வகையிலும் இழப்பை ஏற்படுத்தாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை உண்டாக்காமல் பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.