சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே தேசிய முற்போக்கு திராவிடக் கழக சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விஜயபிரபாகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ் மங்கலம் பாரனூர் கிராமத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மக்கள், இலவச பட்டா கேட்டு தலையில் மண்சட்டி அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் அமர்ந்தனர்.ராமநாதபுரத்தில் ஜெயிலர் படம் வெளியானதை முன்னிட்டு, ரஜினி வேடமடைந்து ரசிகர்கள் நடனம்.வருகிற 20-ம் தேதி நடைபெறவிருக்கும் அ.தி.மு.க எடப்பாடி அணி மாநாட்டுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, தனது தொகுதியில் இருக்கும் மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கினார்.என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து தூத்துக்குடியில் தே.மு.தி.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி முத்தியால்பேட்டையில் வசிக்கும் விடுதலைப் போராட்ட வீரர் பஸ்தே சுப்புராயலுவை கௌரவிக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய அங்கவஸ்திரத்தை துணை ஆட்சியர் கந்தசாமி நேரடியாக அவர் வீட்டுக்குச் சென்று வழங்கினார்.ராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்து, வனத்துறையினர் விசாரணை.தே.மு.தி.க சார்பில் தி.மு.க அரசைக் கண்டித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம்.சேலத்தில் மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து, புதிய பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.புதுச்சேரி ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ரங்கசாமி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.சுதந்திர தின விழாவையொட்டி சென்னை தலைமைச் செயலகம், கோட்டை கொத்தளத்தில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.தடுமாறிய பாகிஸ்தான்; அடித்து நொறுக்கி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!மதுரையில் ஜெயிலர் படத்துக்கு கைதிகள் வேடம் அணிந்து திரையரங்குக்கு வந்த ரஜினி ரசிகர்கள்.50 கிலோ பிரமாண்ட கேக் வெட்டி, ஜெயிலர் படத்தைக் கொண்டாடிய மதுரை ரசிகர்கள்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியான நிலையில், தஞ்சையில் ரசிகர்கள் அவரது உருவப்படத்துக்குப் பால் அபிஷேகம் செய்தனர்.கேரள மாநிலம், திருவனந்தபுரம் நகரின் முக்கிய சாலைகளில் பிரமாண்டமாக காணப்படும் ரஜினியின் ஜெயிலர் திரைப்பட போஸ்டர்கள்.விருதுநகரில் `என் மண், என் மக்கள்’ பாதயாத்திரையின்போது பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தொண்டரின் புல்லட்டில் `மீண்டும் வேண்டும் மோடி’ என்று எழுதினார்.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சேலம் மற்றும் கும்பகோணம் கழகங்களுக்கு முதற்கட்டமாக 100 பேருந்துகளை முதல்வர் மு.க .ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க இருப்பதால், அதற்காக தீவுத்திடலில் நிறுத்தப்பட்டிருக்கும் புதிய மஞ்சள் நிற பேருந்துகள்.சுதந்திர தின விழாவையொட்டி சென்னை தலைமைச் செயலகம், கோட்டை கொத்தளத்தில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.சுதந்திர தின விழாவையொட்டி சென்னை தலைமைச் செயலகம், கோட்டை கொத்தளத்தில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சேலம் மற்றும் கும்பகோணம் கழகங்களுக்கு முதற்கட்டமாக 100 பேருந்துகளை முதல்வர் மு.க .ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க இருப்பதால், அதற்காக தீவுத்திடலில் நிறுத்தப்பட்டிருக்கும் புதிய மஞ்சள் நிற பேருந்துகள்.கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்தின்
முதல் காட்சியை காண திரையரங்குகளில்
அதிகாலையில் குவிந்த ரசிகர்கள்.!விருதுநகரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு.ஈரோடு மாவட்டம், அந்தியூர் குருநாதசாமி திருவிழாவையொட்டி கால்நடை சந்தை நடைபெற்றது.நாகர்கோவில் ஸ்ரீ கார்த்திகை திரையரங்கில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியானதயொட்டி, ரஜினி படங்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், தேங்காய் உடைத்தும் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.சென்னை மாதவரத்தில் பெண்கள் சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் இன்று முதல் செயல்படத் தொடங்கியது. இதில் வாகனங்களுக்கு பெட்ரோலை நிரப்பும் சிறைவாசிகள்.சென்னை மாதவரத்தில் பெண்கள் சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் இன்று முதல் செயல்படத் தொடங்கியது. இதில் வாகனங்களுக்கு பெட்ரோலை நிரப்பும் சிறைவாசிகள்.ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் மாடுகளை அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள்.