வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜகார்த்தா: காற்று மாசு பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களில் இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா உலக அளவில் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தினை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐக்யூ ஏர் என்ற காற்று மாசு ஆய்வு செய்யும் அமைப்பு, உலகளவில் காற்று மாசு பாதிப்புள்ளான 10 நகரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
![]() |
மேலும் இந்நகரில் வசிப்பவர்களின் குழந்தைகள் தான் சுவாசக்கோளாறு , மூச்சு திணறல், வயிற்று போக்கு போக்க நோய்களால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அந்த ஆய்வில் தெரிவித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 2050ம் ஆண்டில் வாழ தகுதியில்லா ந(ர) ..க)ரமாக மாறும் எனவும் கூறியுள்ளது.
ஜகார்த்தா நகரில் பெருகி வரும் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை , தொழில்துறைசாலையில் இருந்து புகை மற்றும் நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து நச்சு காற்று போன்றவையும் காரணமாக உள்ளதாக புகார் கூறப்பட்டு வருகிறது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி 2021ல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிவில் வழக்கு தொடர்ந்தனர். இதில் அரசை கடுமையாக நீதிமன்றம் கண்டித்துள்ளது.
காற்று மாசு தர குறியீடு
1) ஜகார்த்தா – 157
2) ஷாங்காய் -156
3) வூஹான் -134
4) இன்ஜியான்-126
5) சாண்டியாகோ-125
6) குவைத் -124
7) டில்லி-105
8) கராச்சி -95
9) தோகா -92
10)போஸ்னியா-91
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement