Jailer first day collection: ஜெயிலர் முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா ? வெளியான வசூல் நிலவரம்..!

ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் இன்று திரையில் வெளியாகியுள்ளது. கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு ரஜினியின் படம் திரையில் வெளியாவதாலும், இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்ததாலும் ரசிகர்கள் இப்படத்தை காண ஆவலாக இருந்தனர்.

அதன் காரணமாகவே இப்படத்தின் முன்பதிவும் அமோகமாக இருந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும், அயல் நாடுகளிலும் இப்படத்தின் முன்பதிவு சிறப்பாக இருந்தது. ப்ரீ புக்கிங்கில் மட்டும் ஜெயிலர் திரைப்படம் பல கோடி வசூலை ஈட்டியது.

ஜெயிலர் வசூல்

இதைத்தொடர்ந்து இன்று ஜெயிலர் திரைப்படம் திரையில் வெளியாகி ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகின்றது. ரஜினி மற்றும் நெல்சன் இருவரும் ஜெயிலர் படத்தின் மூலம் சேர்ந்து கம்பாக் கொடுத்ததாகவும், பல படங்கள் கழித்து பழைய மாஸான ரஜினியை மீண்டும் ஜெயிலர் படத்தின் மூலம் பார்த்ததாகவும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Jailer Movie Review: ஜெயிலர் விமர்சனம்..படம் எப்படி இருக்கு ? வெளியான FDFS லைவ் அப்டேட்ஸ்..!

இருப்பினும் ஜெயிலர் படத்தில் ஒரு சில குறைகளை ரசிகர்கள் முன் வைத்தாலும் பெரும்பாலான ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களையே வழங்கி வருகின்றனர். ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்தும் சேர்ந்த கலவையாக நெல்சன் இப்படத்தை கொடுத்துள்ளதாக கூறி நெல்சனையும் பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் நன்றாக இருந்தால் மட்டும் முக்கியமல்ல. அந்த படம் எந்த அளவிற்கு வசூலிக்கிறது என்பதும் முக்கியம் தான். அதை வைத்து தான் ஒரு படம் வெற்றியா தோல்வியா என முடிவு செய்கின்றனர். குறிப்பாக ரசிகர்கள் தற்போது தங்களின் நாயகனின் படம் எந்த அளவிற்கு வசூல் செய்கின்றது என்பதை தான் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

வெளியான நிலவரம்

அதிலும் குறிப்பாக படத்தின் முதல் நாள் வசூல் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் ஜெயிலர் படத்தின் முன்பதிவை கருத்தில் கொண்டு இப்படம் முதல் நாளில் மட்டும் 40 கோடி வரை வசூலிக்கும் என கணிக்கப்பட்டது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

ஆனால் தற்போது படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வருவதால் இப்படம் கண்டிப்பாக முதல் நாளில் ஐம்பது கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இனி வரும் நாட்களில் ஜெயிலர் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.