சபரிமலை :சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று நடந்த நிறை புத்தரிசி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டில் வறுமை நீங்கி விவசாயம் செழிக்க வேண்டி எல்லா ஆடி மாதமும் சபரிமலை உள்ளிட்ட அனைத்து கேரள கோயில்களிலும் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். வயல்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்கதிர்கள் கோயிலில் படைக்கப்பட்டு அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
இந்த பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5:00மணிக்கு நடை திறந்தது. 5.30மணிக்கு நிறை புத்தரிசி பூஜைகள் துவங்கின. தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் தேவசம்போர்டு வயல்களில் இருந்து கொண்டுவரப்பட்ட நெற்கதிர்களை சன்னதி மண்டபத்தில் வைத்துபூஜை நடத்தினார்.
தொடர்ந்து மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி, பூஜாரிகள் அந்த நெற்கதிர்களை சன்னதிக்குள் கொண்டு சென்றனர். அங்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜைகள் நடத்தி நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்.
பூஜைகள் நிறைவு பெற்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. ஆவணி மாத பூஜைகளுக்காக ஆக., 16 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement