
வெளியீட்டிற்கு தயாராகும் ‛நா நா' : டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சலீம் பட இயக்குனர் நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார், சரத்குமார் இணைந்து நடித்துள்ள படம் 'நா நா'. ஹர்ஷவர்தன் இசையமைத்துள்ளார். 2019ல் அறிவிக்கப்பட்ட இந்த படம் சென்னை, மும்பையில் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்படம் முழுவதும் முடிவடைந்தும் ஒரு சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. சசிகுமார் நடித்து வெளிவந்த படங்களும் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. சமீபத்தில் வெளிவந்த அயோத்தி படத்தில் சசிகுமார் நடிகராக கம்பேக் கொடுத்தார். இந்நிலையில் கிடப்பில் போடப்பட்டு கிடந்த நா நா படத்தின் ரிலீஸ் வேலைகள் துவங்கின. சமீபத்தில் இதன் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமம் விற்பனையானது. இந்த நிலையில் நாநா படத்தின் டிரைலர் நாளை, ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். டிரைலர் உடன் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.