ஹவாய் தீவில் பகீர்… பேரழிவு, அணையாமல் எரியும் காட்டுத்தீ… ஜோ பைடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு!

அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள தீவுகளில் ஒன்றாக ஹவாய் திகழ்கிறது. சுற்றுலாவிற்கு மிகவும் புகழ்பெற்றது. மக்கள்தொகை என்று எடுத்து கொண்டால் சுமார் 15 லட்சம் பேர். காடுகளால் சூழப்பட்டு இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக பலரையும் ஈர்த்து வருகிறது. இந்த ஹவாய் தீவுகளுக்கு தற்போது பெரிய ஆபத்து வந்துள்ளது.

பெரியகுளத்தில் கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மருத மரத்தில் தீ வைப்பு

ஹவாய் தீவில் காட்டுத்தீ

கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயால் இதுவரை 53 பேர் பலியாகியுள்ளனர். 14 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தினசரி உயிரிழப்புகளும் பதிவாகி வருகின்றன.

ஈக்வடார் தேர்தல் பிரச்சாரத்தில் ஷாக்… அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ சுட்டுக் கொலை!

லஹைனா பகுதியில் படுமோசம்

அடுத்தகட்டமாக 14,500 பேரை இடம்பெயர செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவிற்காக வந்தவர்கள் உடனடியாக தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹவாய் தீவில் உள்ள மவி அருகே லஹைனா பகுதியை மிக மோசமாக பாதித்துள்ளது. இங்குள்ள மக்கள் மின்சாரம் இல்லாமல் பொழுதை கழிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இயற்கை பேரிடர் என அறிவிப்பு

பொதுமக்கள் இடம்பெயரவும், தீயணைப்பு வசதிகளை விரைவாக கொண்டு செல்லவும் சாலைகளை அரசு ஊழியர்கள் எந்தவித பாதிப்பிற்கும் ஆளாக்காமல் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருகிறார். ஹவாய் தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை மிகப்பெரிய இயற்கை பேரிடர் என்று நேற்றைய தினம் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகை அறிவிப்பு

எனவே அம்மாகாணத்திற்கு தேவையான உதவிகளை செய்து தர உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் அறிவுறுத்தி இருக்கிறார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஹவாய் தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை ஏற்படுத்தி தரப்படும்.

பரவும் புதிய வகை கொரோனா: மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள் – எச்சரிக்கும் நிபுணர்கள்!

கடன் தொகையும், மீட்பு பணிகளும்

சேதமடைந்த வீடுகளை சீரமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்த வட்டியில் கடன் தொகை கொடுத்து காப்பீடு செய்யப்படாத சொத்துகளால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய உதவி செய்யப்படும். சிறு மற்றும் பெரிய தொழிலதிபர்களுக்கு போதிய கடனுதவி அளித்து மீண்டு வர கைகொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பு அதிகாரி நியமனம்

அமெரிக்க கூட்டமைப்பின் பேரிடர் மீட்பு செயல்பாடுகளை மேற்பார்வை செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படுவது மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் FEMA ஏஜென்சியின் மோனா என் குவிரா ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை வெள்ளை மாளிகை தரப்பில் இருந்து வெளியிடப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.