Jailer: ஜெயிலர் FDFS ..இணையத்தில் லீக்கான காட்சிகள்…கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பொதுவாக சூப்பர்ஸ்டார் ரஜினியின் படம் வெளியாகின்றது என்றாலே அன்று அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தான். அதுவும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் படம் திரையில் வெளியாகின்றது என்றால் சொல்லவா வேண்டும். 9 மணிக்கு துவங்கும் காட்சிக்கு அதிகாலையில் இருந்தே ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்து தங்களின் கொண்டாட்டங்களை துவங்கிவிட்டனர்.

பால் அபிஷேம், பட்டாசு என ரசிகர்கள் இன்று ஒரு திருவிழாவை போல ஜெயிலர் ரிலீஸை கொண்டாடி வருகின்றனர். என்னதான் அயல்நாடுகளிலும், அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் இப்படத்தின் முதல் காட்சி அதிகாலையே துவங்கினாலும் தமிழ்நாட்டில் 9 மணி முதலே ஜெயிலர் படம் திரையிடப்பட இருக்கின்றது.

லீக்கான காட்சிகள்

இருந்தாலும் அதிகாலையே படத்தை பார்த்த ரசிகர்கள் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களையே வழங்கி வருகின்றனர். இதன் காரணமாக உச்சகட்ட மகிழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள் இருக்கின்றனர். படம் செம மாஸாக இருப்பதாகவும், ரஜினிக்கு ஒரு சிறப்பான கம்பாக்கை நெல்சன் கொடுத்துள்ளார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Jailer review: ஜெயிலர் விமர்சனம்..படம் எப்படி இருக்கு ? வெளியான FDFS லைவ் அப்டேட்ஸ்..!

இந்நிலையில் ஜெயிலர் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருவதால் தமிழ்நாடு முழுவதும் டிக்கெட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பலருக்கு ஜெயிலர் படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் இருக்கின்றது. இந்த சமயத்தில் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் ரஜினியின் இன்றோ, சண்டை காட்சிகள், இன்டெர்வல் காட்சிகள் என ஒரு சில முக்கியமான காட்சிகளை லீக் செய்து வருகின்றனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் உச்சகட்ட அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே டிக்கெட் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் இருக்கும் ரசிகர்கள், அவர்கள் படம் பார்ப்பதற்குள் அனைத்தையும் லீக் செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர். எனவே இதுபோல காட்சிகளை யாரும் லீக் செய்து ரசிகர்களின் ஆர்வத்தை கெடுக்கவேண்டாம் என அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்

இதையடுத்து இனி படம் பார்க்கும் ரசிகர்கள் இதுபோல திரையரங்கில் இருந்து வீடியோ எடுத்து வெளியிடாமல் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் படம் பார்க்காத ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இன்னும் சில நிமிடங்களில் தமிழ்நாட்டில் ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட இருக்கின்றது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

அனைவரும் தலைவரின் தரிசனத்தை காண ஆவலாக இருக்கின்றனர். மேலும் படமும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதால் தலைவருக்கு மிகப்பெரிய வெற்றி காத்துக்கொண்டிருக்கிறது என்ற மகிழ்ச்சியுடன் தமிழ்நாட்டை சேர்ந்த ரசிகர்கள் படம் பார்க்க தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.