இஸ்ரேலில் 500க்கும் மேற்பட்ட தாதியர்களுக்கு வேலைவேய்ப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் இஸ்ரேலின் PIBA நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி 505 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 13 மற்றும் 15 ஆம் திகதிகளில் இஸ்ரேலில் தாதியர் பணிக்காக செல்லவிருந்த மேலும் 25 இலங்கையர்களுக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் 24 பெண்கள் மற்றும் ஒரு ஆணுக்கும் விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் (ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி) செனரத் யாப்பா மற்றும் பலர் விமான பயணச்சீட்டு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, கடந்த பெப்ரவரி மாதம் இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்கான பணியாளர்களை விரைவாக அனுப்புவது தொடர்பாக அந்நாட்டின் PIBA நிறுவனத்துடன் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையிலிருந்து பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை துரிதப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

இஸ்ரேல் அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாகவே இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தாதியர் வேலைகள் கிடைக்கின்றன. இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக எந்தவொரு வெளிநாட்டவருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதைத் தவிர்க்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.