தர்மபுரி,
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலிப்பதாக கூறியதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
காரிமங்கலம் தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :