
திருமணம் குறித்த சர்ச்சைக்கு டிடியின் நெத்தியடி பதில்
பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியான டிடி என்கிற திவ்யதர்ஷினி சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணத்திற்கு பின் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து செய்து பிரிந்துவிட்டார். தற்போது 36 வயதாகும் டிடி, சிங்கிளாக தான் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் டிடிக்கு விரைவில் இரண்டாவது திருமணம், இவர் தான் மாப்பிள்ளை அவர் தான் மாப்பிள்ளை என பல வதந்திகள் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பதிலளித்துள்ள டிடி, 'சோஷியல் மீடியாவில் வரும் வதந்திகளுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. எனக்கு திருமணம் என்றால் வெளியே தெரிய தான் போகிறது. திருமணம் என்பது சாதனை அல்ல. பத்து வருடத்திற்கு முன் திருமணம் குறித்து இருந்த புரிதல் இப்போது மாறியிருக்கிறது. எல்லோருக்கும் திருமணம் என்பது அவசிய தேவையும் கிடையாது. என்னுடைய வாழ்க்கை என்னுடைய விதி. சோஷியல் மீடியாவில் என்னை பற்றி வரும் விஷயங்களுக்கு நான் கவலைப்பட மாட்டேன். நான் எப்படிப்பட்டவள் என்று எனக்கு தெரியும். நீங்கள் யாரும் சான்றிதழ் தரவேண்டாம்' என கூறியுள்ளார்.