மீண்டும் லாக்டவுன்? – தீயாய் பரவும் கொரோனா… அச்சத்தில் உலக நாடுகள்!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரதாண்டவமாடி லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு காரணமானது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வல்லரசு நாடுகளே கொரோனாவைக் கண்டு ஆடித்தான் போய்விட்டன. கொரோனாவைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் லாக்டவுன் போடப்பட்டதால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். இதனால் பொருளாதார ரீதியிலும் பெரும் துயரத்திற்கு தள்ளப்பட்டனர்.

முதல் அலையைக் கட்டுப்படுத்தி ஓய்ந்திருந்த நிலையில், ஓமிக்ரான் போன்ற புதிய புதிய வடிவங்களில் வந்து மருத்துவ உலகத்தையே அச்சுறுத்தியது கொரோனா. இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் பலனாக ஸ்புட்னிக், கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஊட்டிக்கு திடீர் விசிட் அடித்த ராகுல் – பழங்குடியின மக்களுடன் டான்ஸ் ஆடி உற்சாகம்!

கொரோனா தடுப்பூசி அளித்த நம்பிக்கையும், கொரோனாவின் வீரியம் குறைந்ததாலும் பொதுமக்கள் கடந்த 2 ஆண்டுகளாக லாக்டவுனை போன்றவற்றை மறந்து அன்றாட பணிகளில் வழக்கம்போல ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய வைரஸ்

இந்த நிலையில் கொரோனா வைரஸின் புதிய திரிபு வடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மீண்டும் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. EG.5 அல்லது Eris என அறியப்படும் இந்த கொரோனா வடிவம் ஒமிக்ரான் வைரஸின் XBB.1.9.2 என்ற துணை வகையுடன் தொடர்புடையது.

கொரோனாவின் புதிய திரிபால் கொரோனா பரவலும் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் ஜூலை 10ம் தேதி முதல் ஆகஸ்ட் 6 வரை 1.5 கோடி பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அதற்கு முந்தைய 25 நாட்களை ஒப்பிடும்போது 80 சதவிகிதம் அதிகம் என உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு.? நடராஜன் கூறுவதென்ன..?

எனினும் கொரோனா இறப்பு சதவிகிதம் என்பது 57 சதவிகிதம் குறைந்து 2500 ஆக உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளில் சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஆனாலும் இது சரியான புள்ளிவிவரங்களாக இருக்க வாய்ப்பில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஏனெனில், பல்வேறு நாடுகளும் சோதனை மற்றும் கண்காணிப்பை குறைத்துக் கொண்டதை இதற்கு காரணமாகவும் அடுக்குகிறது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா தொற்றுக்காக அறிவிக்கப்பட்ட உலகளவிலான சுகாதார எமர்ஜென்சி கடந்த மே 5ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்துவிட்டாலும், கொரோனா இன்னும் ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே உள்ளது. ஆகவே, கொரோனா தடுப்புப் பணிகளை உலக நாடுகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

என் கையில மட்டும் இப்போ ஆட்சி இருந்திருந்தா.. திமுகவை பங்கமாய் விமர்சித்த எடப்பாடி

இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?

இந்தியாவைப் பொறுத்தவரை புதிய EG.5.1 திரிபு வைரஸின் பாதிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. கடந்த மே மாதம் புனேவைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகவே பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தியாவில் தொற்றின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் மற்ற நாடுகளில் பரவும் வேகத்தைப் பார்க்கும் போது மீண்டும் புதிய அலை உருவாகி லாக்டவுன் வந்துவிடுமோ என்கிற அச்சம் மக்கள் மத்தியில் உருவாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.