மும்பை: மனைவியின் மருத்துவ செலவுக்கு ரூ.12 லட்சம் செலவு செய்து விட்டு கஷ்டத்தில் இருந்த முதியவருக்கு சோனு சூட் உதவி செய்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் தமிழ், ஹிந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அருந்ததி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
