திருமலை: திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்றிரவு தனது குடும்பத்தாருடன் நடந்து சென்றுக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை, சிறுத்தை திடீரென இழுத்துச் சென்று, அடித்து கொன்றுள்ளது.
ஆந்திர மாநிலம், நெல்லுரை சேர்ந்த தினேஷ் என்பவர் அவரது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். தனது 6 வயது மகளுடன் திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளார். நேற்றிரவு (ஆக.,11) 8 மணியளவில் லட்சுமி நரசிம்மர் கோயில் அருகே வந்தபோது, திடீரென சிறுத்தை ஒன்று, சிறுமியை பிடித்து புதருக்குள் இழுத்து சென்றது. தங்கள் கண் முன்னே மகளை சிறுத்தை இழுத்து செல்வதை பார்த்த பெற்றோர் அலறி கூச்சலிட்டனர்.
தகவலறிந்து திருப்பதி வன அதிகாரிகள் இரவு முழுவதும் சிறுத்தையையும், சிறுமியை தேடினர். இன்று காலையில் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு சற்று தூரத்தில், சிறுமி உடல் கண்டு பிடிக்கப்பட்டது. அதிலும் சிறுமியின் உடல் பாதிதான் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மீதி பாகத்தை சிறுத்தை உட்கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தனது மகளின் சடலத்தை பார்த்து பெற்றோர், உறவினர் கதறி அழுதனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement