ஜெயிலர் படத்தை பொறுத்தவரைக்கும் ரஜினி சார்னு ஒரு மாஸ் ஹீரோ இருக்காரு. அப்புறம் மோகன்லால் சார், சிவராஜ்குமார் சார் வந்தாங்க. இவங்க எல்லாரையும் வச்சி படம் எடுத்தது எப்படி இருந்துச்சு? ஸ்கிரிப்ட் எழுதும்போதே இதை முடிவு பண்ணிட்டீங்களா ?
“அந்தக் கதை பண்ணும்போதே, கர்நாடகாவுல இருந்து ஒருத்தரும், மங்களூர்ல ஒருத்தரும், கேரளா, பாம்பேவுல பெரிய ஆளா இருக்குற மாதிரி தேவைப்பட்டுச்சு. அந்தந்தப் பகுதில இருக்கிற பெரிய ஆர்டிஸ்ட்ட வச்சோம். ஆனா ரெண்டு மூணு சீன் தான் இருக்கும். அது அவங்களுக்கான ப்ளாக்கா இருக்குற மாதிரி தான் வச்சோம். எனக்கு மோகன்லால் சார் ரொம்ப பிடிக்கும். சிவ ராஜ்குமார் சாரும் ரொம்ப பிடிக்கும். சில பேரை பார்க்கும் போதே அவங்க கூட வொர்க் பண்ணணும், அவங்கள ஷூட் பண்ணனும்ணு இருக்கும்.
அவங்கக்கிட்ட கேட்கும் போது, ரஜினி சாருக்காக ஒத்துக்கிட்டாங்க. அவங்கள ஷூட் பண்ணும் போது, அதை தப்பா யூஸ் பண்ணிடக்கூடாது. நேத்து மோகன்லால் சார் பேசினாரு. “கேரளாவுல பயங்கரமா ரெஸ்பான்ஸ் இருக்கு”-ன்னு சொன்னாரு. தியேட்டர் ஃபுல் ஆகுதுன்னு அங்க இருக்குறவங்க கால் பண்ணி சொன்னாங்க. இன்னைக்கு சிவராஜ்குமார் சார் பேசுனாரு. அவர் இன்னும் படம் பாக்கல. “என்ன பண்ணி வச்சீங்கன்னு தெரியல. எனக்கு கால் வந்துட்டே இருக்கு. இன்னைக்கு தான் படம் பாக்கப் போறேன்னு” சொன்னாரு. அவங்க ரஜினி சாருக்காக வந்திருப்பாங்க. அவங்களுக்கு ஒரு வரவேற்பு கிடைக்கும் போது, இன்னும் பெரிய பெரிய கேரக்டர்ஸ் பண்ணலாம்னு சொல்லும் போது ஓகேவா இருக்கும். எல்லோருக்கும் அவங்களுக்குன்னு ஒரு புகழ் இருக்கு. அதை நாம கரெக்டா யூஸ் பண்ணிருக்கோம்ங்கிறது ஹேப்பியா இருக்கு.”
விநாயகன் சார் செம்ம வில்லனா நடிச்சிருந்தாரு. அவரை எப்படி படத்துக்குள்ள கூட்டிட்டு வந்தீங்க?
“அவரோட லுக் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதுமட்டுமில்லாம, கதைலயும் ஒரு மலையாள வில்லன் தான் தேவைப்படுது. மலையாளமும் தமிழும் கலந்து தான் பேசணும், அது நமக்கும் புரியணும். அப்படி யாருன்னு பார்க்கும் போது, அங்க இருந்தே காஸ்டிங் பண்ணலாம்னு முடிவு பண்ணோம். அந்த வில்லன் லுக்ல பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டோம்.”
எல்லா இண்டஸ்ட்ரில இருந்தும் ஒரு ஸ்டார் படத்துல இருக்காங்க. தெலுங்குல இருந்து யாரையாவது யூஸ் பண்ணனும்னு ஐடியா இருந்ததா?
“தெலுங்குல இருந்து பாலகிருஷ்ணா சார், யூஸ் பண்ணனும்னு ரொம்ப ஆசை இருந்துச்சு. எங்கேயாவது ரெண்டு சீன் அவருக்காக வைக்க முடியுமான்னு, பார்த்துப் பார்த்து கரெக்டா வைக்க முடியல. ஆனா, பாலகிருஷ்ணா சார் படத்துல வச்சிருக்கணும்னு தோணுது. அவர் ஒத்துப்பாரா, இல்லையான்னு எனக்கு தெரியல. ஆனா, அவருக்கான ஸ்கோப் இருந்தா கண்டிப்பா அவரை அப்ரோச் பண்ணிருப்பேன். படத்துல ஒரு போலீஸ் கேரக்டர் இருந்தது. ரொம்ப டெரரா இருக்குற போலீஸ் மாதிரி. படத்துல மத்த எல்லாருக்கும் ஒரு ஸ்டார்ட், ஒரு எண்ட் இருக்கும். ஆனா, இவருக்கு ஸ்டார்டிங், எண்டிங் அவரோட பவருக்கு ஏத்த மாதிரி இல்லைன்னு தோணுச்சு. அதனால, பண்ண முடியல. கடைசியில அவங்க எல்லோருமே ஒன்னா இருக்குற மாதிரி யோசிச்சேன். ஒருவேளை, ஃபியூச்சர்ல வேற எதுலயாவது பண்ணலாம்.”
`கோலமாவு கோகிலா’வுக்கு அப்புறம் `டாக்டர்’, `பீஸ்ட்’, `ஜெயிலர்’ என அடுத்தடுத்து படம் பண்ணிட்டீங்க. ஒரு படம் முடியறதுக்குள்ள அடுத்த படம் கமிட் ஆகிட்டீங்க. அப்போ உங்க மனநிலை எப்படி இருந்தது?
“எப்போதுமே ஒரு படம் முடிச்சுட்டு தான், அடுத்த படம் பண்ணனும்னு இருப்பேன். புரொடியூசர்ஸ் கிட்ட கூட எனக்கு கமிட்மென்ட் இருக்காது. அந்தந்த படம் தான், அடுத்து என்னன்னு டிசைட் பண்ணும். டாக்டர் பண்ணும் போது, ‘பீஸ்ட்’ கமிட் ஆகிட்டேன். கோலமாவு கோகிலா முடிச்ச பிறகு ப்ரேக். அப்புறம் தான், ‘டாக்டர்’ கதை பண்ணோம். டாக்டர் பண்ணும் போது, கோவிட் வந்துடுச்சு. அதனால, ரெண்டு மூணு வருஷம் அப்படியே லாக் ஆகிடுச்சு. ஆல்ரெடி நான் சினிமாவுக்கு வந்ததே 2009-10 அப்படி. ஆனா, என்னோட படம் ‘கோலமாவு கோகிலா’ வந்தது 2018 தான். அங்கேயே எடுக்க வேண்டிய ப்ரேக்-லாம் எடுத்துட்டேன். முதல்லயே லீவ் லாம் எடுத்துட்டு, அப்புறம் வேலைக்கு வந்த மாதிரி. கோவிட்ல டைம் இருந்ததுனால, ‘பீஸ்ட்’ கமிட் ஆகி, ‘டாக்டர்’ ரிலீசுக்கு முன்னாடியே ஷூட்டிங் போய்ட்டோம். ‘பீஸ்ட்’ பண்ணிட்டு இருக்கும்போது, அடுத்து என்னன்னு யோசிச்சேன்.
இப்போ, பெரிய நடிகர்கள் கிட்ட போகணும்னா முதல்லயே ப்ளாக் பண்ணுனா தான் கால்ஷீட் கிடைக்கும். இல்லனா, அடுத்த பத்து வருஷத்துக்கு பிஸியாவே இருப்பாங்க. விஜய் சாரும் நானும் ஷூட்டிங் ஸ்பாட்ல நிறைய பேசுவோம். அவரும் ரஜினி சார் பத்தி நிறைய பேசுவாரு. ரஜினி சார் ஒரு “Idendity of Indian Cinema” மாதிரி. இப்படி பேசிட்டு இருக்கும்போது, “அவரை வச்சு எப்படி படம் பண்ண முடியும்”-ன்னு தோணும். அவரை வச்சி யோசிச்சாலே பாட்ஷாவும், அண்ணாமலையும் தான் நியாபகம் வரும். ரஜினி சார் படம்னாலே, அது ஒரு தனி ஜானர். அதை நாம பண்ணுவோமா, பண்ணமாட்டோமா-ன்னு குழப்பமாவே இருந்துச்சு. அப்போ, விஜய் சார் தான், “இல்ல, நீ பண்ணு. நீ கதை பண்ணு. அவர் ஒத்துப்பாரு”-ன்னு சொன்னாரு. அவர் ஒத்துப்பாரா, மாட்டாரான்னே இருந்துச்சு. அவர் கான்ஃபிடன்ஸ்-லாம் கொடுத்ததுக்கு அப்புறம் தான், அந்த ஐடியாவே கிரியேட் பண்ணோம்.”
தனுஷுடன் அடுத்த படமா? இந்தியன் படத்துடன் ஒப்பீடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அளித்த பதில் வீடியோ வடிவில் – Next with Dhanush? | Indian மாதிரி இருக்கா?! – Nelson | Rajini | Part 02