சென்னை: திருநெல்வேலியில் உள்ள நாங்குநேரியில் மாணவன் சின்னத்துரை மற்றும் அவனது 14 வயது தங்கையையும் சாதி வெறிக் காரணமாக சில மாணவர்கள் வீடு புகுந்து சரமாரியாக வெட்டிய சம்பவத்துக்கு திரையுலகை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர்கள் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ், மோகன் ஜியை தொடர்ந்து இயக்குநர் ராஜு முருகன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
