பெங்களூரு புறநகர் ரயில்: 2 வருஷம் தள்ளி போகுது… முதல் ரூட்டிற்கு தேதி குறிச்ச K-RIDE!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் புறநகர் ரயில் சேவை திட்டத்தை (Bengaluru Suburban Rail Project) செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். மொத்தம் 148 கிலோமீட்டர் தூரத்திற்கு வழித்தடம் அமைத்து வரும் 2026ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. இதற்கு 15,767 கோடி ரூபாய் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதையொட்டி கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, அடுத்த 40 மாதங்களில் பெங்களூரு மக்கள் புறநகர் ரயிலில் பயணிக்கலாம் என்று தெரிவித்தார்.

K-RIDE இயக்குநர் பதவிக்கு சிக்கல்இந்த திட்டத்தை கர்நாடகா மாநில ரயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (K-RIDE) செயல்படுத்தி வருகிறது. இதற்கு முழு நேர மேலாண் இயக்குநரை நியமிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. ஏனெனில் இந்திய ரயில்வே சேவை துறையில் இருந்து தான் இயக்குநரை நியமிக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் கூறுகிறது. அப்படி வேண்டாம். பல்வேறு சேவை துறைகளில் இருந்து சரியான அதிகாரியை தேர்வு செய்யலாம் என்று கர்நாடகா அரசு கூறுகிறது.​பெங்களூரு புறநகர் ரயில் திட்டம்இந்த மோதல் போக்கு K-RIDE நிறுவனத்திற்கு சரியான இயக்குநரின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளியிருக்கிறது. இது நிர்வாக ரீதியில் சிரமங்களை ஏற்படுத்தி வருவது கவனிக்கத்தக்கது. இதற்கிடையில் பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி 14 மாதங்கள் ஆகிய நிலையில் தற்போதைய நிலவரம் என்ன? என்ற கேள்வி பெங்களூரு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கான பதிலை கர்நாடகா மாநில உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இன்னும் 26 மாதங்களில்அதாவது, பையப்பனஹள்ளி முதல் சிக்கபனவரா வரையிலான முதல்கட்ட திட்டம் வரும் அக்டோபர் 2025ல் பயன்பாட்டிற்கு வரும். அடுத்த 26 மாதங்களில் இந்த வழித்தடம் பயன்பாட்டில் இருக்கும். இதுவரை 15 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்த திட்டத்தையும் முடிப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன.
புதிய ரயில் பாதை சிக்கல்உதாரணமாக ரயில்வே நிர்வாகத்தின் தீர்மானங்கள், ஒப்பந்தங்களை டெண்டர் விடுதல், நிலம் கையகப்படுத்துதல் போன்றவற்றை சொல்லலாம். இதனால் பணிகள் தாமதம் அடையும். எனவே 2028ஆம் ஆண்டு பெங்களூரு புறநகர் ரயில் பாதை திட்டம் முழுமை பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார். இந்த திட்டத்தில் சில சிக்கல்கள் இருக்கின்றன. தற்போது பயன்பாட்டில் உள்ள ரயில் பாதைகளுக்கு இணையாக புதிய பாதை போடப்பட உள்ளது.
ரயில் திட்ட செலவுகள்மேலும் இதுவரை பயன்படுத்தாத இடங்களிலும் ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன. இதனால் சிரமங்கள் அதிகமிருப்பதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். அதேசமயம் மெட்ரோ வழித்தடத்தை கட்டமைப்பதற்கான செலவை விட புறநகர் ரயில் பாதையை கட்டமைக்க குறைவான செலவே ஆகிறது. பெங்களூரு நகருக்கு உள்ளே புறநகர் ரயில் வழித்தடம் அமைக்க 100 கோடி ரூபாயும், நகருக்கு வெளியே 30 – 40 கோடி ரூபாய் வரையிலும் செலவாகிறது.வெளிநாட்டில் இருந்து நிதியுதவிஇந்த திட்டத்திற்கான செலவிற்கு 7,438 கோடி ரூபாய் வரை நிதியை பெறும் முயற்சியில் K-RIDE மும்முரம் காட்டி வருகிறது. இதற்காக ஜெர்மனியின் KFW வங்கி, ஐரோப்பிய முதலீட்டு வங்கி ஆகியவற்றின் உதவியை நாடியுள்ளனர். வருங்காலத்தில் பெங்களூரு புறநகர் ரயில் சேவையை மைசூரு, ஓசூர், துமகுரு உள்ளிட்ட பகுதிகளுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.