முதலமைச்சரின் காவல் பதக்கம்… யார் அந்த 6 போலீசார்? தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

நாட்டின் 76வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாநில தலைநகரிலும் விழாக்கள் நடத்தப்படவுள்ளன. முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவர். அதன்பிறகு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு அரசு சார்பில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.

சுதந்திர தின விழா: கடலூரில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை!

சென்னையில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள்

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் 40,000 போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

முதலமைச்சரின் காவல் விருது

இந்நிலையில் 2023ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் முதலமைச்சர் காவல் விருது சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 2023 சுதந்திர தின விழா நடைபெறும்.

TN Police Award 2023

6 காவலர்களுக்கு அறிவிப்பு

இதையொட்டி இன்று காலை 7 மணி முதல் அணிவகுப்பு முன்னோட்டம் நடைபெறும். மேலும் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்தல், சட்டவிரோத செயல்பாடுகளை ஒடுக்குதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட 6 காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் விருது வழங்கப்படும். அவர்கள்,

சென்னை டூ நாமக்கல் வரை

அஸ்ரா கார்க், ஐபிஎஸ், சென்னை மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு (வடக்கு) கூடுதல் ஆணையர்வி.பத்ரிநாராயணன் ஐபிஎஸ், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்டோங்கரே பிரவின் உமேஷ், ஐபிஎஸ், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்எம்.குணசேகரன், சேலம் ரயில்வே மண்டலத்தின் காவல் துணை கண்காணிப்பாளர்எஸ்.முருகன், நாமக்கல் மாவட்ட காவல் துணை ஆய்வாளர்ஆர்.குமார், நாமக்கல் மாவட்ட கிரேடு 1 பிசி 1380

நோடல் அதிகாரியாக ஏடி சக்கரவர்த்தி டி.எஸ்.பி

இவர்கள் அனைவரும் சுதந்திர தின விழா நடைபெறும் நாளன்று சென்னையில் நடைபெறும் விழாவில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப அனைவரையும் பணியில் இருந்து தற்காலிகமாக விடுவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான நோடல் அதிகாரியாக ஏ.டி.சக்கரவர்த்தி, டி.எஸ்.பி, என்.ஐ.பி சி.ஐ.டி, சென்னை நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.