புதுடில்லி:“டில்லி பெண்கள் ஆணையத்தில் உதவி கேட்டு, ஓராண்டில் 6.30 லட்சம் பேர் போன் செய்துள்ளனர்,” என, அதன் தலைவி ஸ்வாதி மாலிவல் கூறினார்.
டில்லி பெண்கள் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவல் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
ஜூலை 2022 முதல் ஜூன் 2023 வரை 6.30 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், உதவி கேட்டு டில்லி பெண்கள் ஆணைய உதவி எண் 181க்கு போன் செய்துள்ளனர்.
குடும்ப வன்முறை, பக்கத்து வீட்டாருடன் மோதல், பாலியல் சீண்டல், பலாத்காரம், சிறுமியர் மீதான பாலியல் வன்கொடுமை, கடத்தல் மற்றும் இணையவழி குற்றங்கள் என, 92,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெண்கள் ஆணையத்தின் உதவி மையம் 24 மணி நேரமும் இயங்கும்.
போன் செய்து உதவி கேட்கும் பெண்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கப்படுகிறது, தேவைப்பட்டால், டில்லி போலீஸ், மருத்துவமனை மற்றும் தங்குமிடங்கள் போன்ற அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுகின்றன.
பெரும்பாலான நேரங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவ, பெண்கள் ஆணையத்தின் குழு நேரில் செல்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement