சென்னை குரோம்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் வசிப்பவர் செல்வசேகர், இவரது மகன் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் மனைவியை பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்த செல்வசேகரும் மகனின் பிரிவை தாங்க முடியாமல் இன்று தற்கொலை செய்து கொண்டார். போட்டோகிராஃபரான செல்வகுமாரின் மகன் ஜெகதீஸ்வரன் தனியார் பள்ளியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்றார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிளஸ் டூ தேர்வில் 424 மதிப்பெண்கள் பெற்று […]
