வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைநகர் டில்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் நாச வேலையில் ஈடுபடலாம் என்பதால் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தவும், அனைவரும் ‘அலெர்ட்’ ஆக இருக்குமாறும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
நாடு முழுதும் நாளை (ஆக.,15) 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைநகர் டில்லியில் உள்ள செங்கோட்டையில் நாளை காலை 7:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இதையொட்டி டில்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செங்கோட்டை பகுதியை சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு 5,000த்துக்கும் அதிகமான வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேசிய கமாண்டோ படை வீரர்கள், உயரமான கட்டடங்களில் இருந்து துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்தியாவின் முக்கிய இடங்களில் போலீசார், ராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தவும், அனைவரும் ‘அலெர்ட்’ ஆக இருக்குமாறும் எச்சரித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement