Jailer Collection: நாலே நாளில் ரூ. 300 கோடி வசூலித்த ஜெயிலர்: இந்தியாவில் மட்டும்…

Jailer Blockbuster: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் உலக அளவில் ரூ. 300 கோடி வசூல் செய்திருக்கிறது.

​ஜெயிலர்​நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸானது. படம் ரிலீஸான அன்றே உலக அளவில் ரூ. 72 கோடி வசூல் செய்தது. ஜெயிலர் படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டத்திற்கு குறைவில்லை. ஞாயிற்றுக்கிழமையான நேற்று இந்தியாவில் மட்டும் ரூ. 38 கோடி வசூல் செய்திருக்கிறது ஜெயிலர்.
Jailer Collection: 2023ல் தமிழகத்தில் முதல் நாளே அதிகம் வசூலித்த படம் ஜெயிலர்: எத்தனை கோடி தெரியுமா?ஹிட் படம்​சொல்லி அடித்த நெல்சன் ரஜினியின் பெரிய Hit​​ரூ. 300 கோடி​ஜெயிலர் படம் ரிலீஸான நான்கே நாட்களில் உலக அளவில் ரூ. 300 கோடி வசூல் செய்துள்ளது. அதில் இந்தியாவில் மட்டும் ரூ. 146.40 தோடி வசூலித்திருக்கிறது. விடுமுறை நாள் என்பதால் நேற்று தியேட்டர்களில் குடும்ப ஆடியன்ஸ்களின் கூட்டமாக இருந்தது. ரஜினியை பார்க்க குடும்பத்துடன் வந்து பலரும் படம் பார்த்துவிட்டு சென்றார்கள்.

​ரூ. 150 கோடி​ஜெயிலர் படம் இன்று இந்தியாவில் ரூ. 150 கோடி வசூலை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை சுதந்திர தினம் என்பதால் விடுமுறை நாள். அதனால் நாளை தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் படம் பார்ப்பவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் நல்லவிதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதை பார்த்துவிட்டு தியேட்டருக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
​வரவேற்பு​விஜய்யின் வாரிசை முந்திய ஜெயிலர்ஜெயிலர் படம் அமெரிக்காவில் இதுவரை 4 மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளது. அமெரிக்காவில் விஜய்யின் வாரிசு, அஜித் குமாரின் துணிவு ஆகிய படங்களின் மொத்த வசூலை ஒரே நாளில் முந்திவிட்டது. மேலும் விஜய்யின் கோட்டையான கேரளாவிலும் ஜெயிலர் வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. கேரளாவில் 4 நாட்களில் ரூ. 23 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

​சிவராஜ்குமார்​ஜெயிலர் படத்தில் மோகன்லால் கவுரவத் தோற்றத்தில் வந்தார். அதை பார்த்து மலையாள ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கன்னட நடிகரான சிவராஜ்குமாரின் காட்சி மாஸாக அமைந்துவிட்டது. அந்த காட்சியை பற்றித் தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமையாக பேசி வருகிறார்கள். சிவராஜ்குமார் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் அவரை சுற்றி வளைத்து பாராட்டுகிறார்கள்.

​ஜெயிலரில் ரஜினிக்கு முன்பே கெத்து காட்டிய ஷிவாண்ணா​
​நெல்சன்​ஜெயிலர் படத்தில் வின்டேஜ் ரஜினியை காட்டிய நெல்சன் திலீப்குமாருக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜெயிலர் 2 படம் வரக்கூடும் என ஹின்ட் கொடுத்திருக்கிறார் நெல்சன். அதை கேட்டு ரஜினி ரசிகர்கள் பயங்கர குஷியில் இருக்கிறார்கள். ரசிகர்கள் ஜெயிலரை கொண்டாடும் இந்த நேரத்தில் இமயமலையில் இருக்கிறார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

​ரஜினி​​Jailer: கலக்கிட்டடா: ஜெயிலர் வெற்றிக்காக நெல்சனுக்கு போன் செய்து பாராட்டிய விஜய்ஜெயிலர் பட ரிலீஸுக்கு முன்பே ரஜினி இமயமலைக்கு சென்றுவிட்டார். அங்கிருந்து அவ்வப்போது புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் பட வெற்றி குறித்து அறிந்த விஜய்யோ நெல்சனுக்கு போன் செய்து மனதார பாராட்டியிருக்கிறார். ஜெயிலருக்கு முன்பு விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.