ஸ்டாலினுக்கு 3ஆம் வகுப்பு மாணவனின் கடிதம்… சுதந்திர தின விழாவில் கிடைச்ச ஜாக்பாட்!

பள்ளிப் பருவத்தின் போதே உயர்ந்த கனவுகளை மனதில் பதிய வைத்து கொண்டே மாணவ, மாணவிகள் படிப்பது வருங்கால சமூகத்திற்கு சிறப்பான திறவுகோலாக இருக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள். இப்படியான சூழலை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த மாணவர்களுக்கு ஒரு நாள் ஆசிரியர், ஒரு நாள் தலைமை ஆசிரியர், ஒரு நாள் கிராம ஊராட்சி தலைவர், ஒரு நாள் மாவட்ட ஆட்சியர் என வாய்ப்புகளை வழங்கி சிறப்பித்து வருகின்றனர்.

ஒரே ஒரு ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோவை மாணவர்கள்..
3ஆம் வகுப்பு மாணவனின் ஆசை

இவை மாணவர்களின் விருப்பமாகவும் அவ்வப்போது வெளிப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பாப்பனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை சேர்ந்த மூன்றாம் வகுப்பு விதர்சனுக்கு ஓர் ஆசை எழுந்துள்ளது. அதாவது, தலைநகர் சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவை நேரில் காண வேண்டும்.

முதலமைச்சருக்கு கடிதம்

முதலமைச்சர் கொடியேற்றுவதை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதற்கு கோட்டையில் இருந்து பதிலும் வந்துள்ளது. நீங்கள் சென்னையில் நடக்கும் சுதந்திர தின விழாவில் நேரில் கலந்து கொள்ளலாம்.

Student Vitharsan

கோட்டையில் இருந்து பதில்

புறப்பட்டு வாருங்கள். உடனே மாணவன் விதர்சன் மகிழ்ச்சியில் திளைத்தார். இந்நிலையில் இன்றைய தினம் (ஆகஸ்ட் 15) சென்னை கோட்டை கொத்தளத்தில் 77வது சுதந்திர தினத்தை ஒட்டி முதலமைச்சர்

கொடியேற்றி வைத்தார்.

தேசிய கொடியேற்றும் நிகழ்வு

அப்போது சிறுவன் விதர்சனும் அருகில் இருந்தார். இதன்மூலம் இவரது ஆசையும் நிறைவேறிவிட்டது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தொடர்பாக மாணவன் விதர்சனின் தாயார் அமுதவல்லி பேசுகையில், எங்களை வரவழைத்து தங்க வைத்து நன்றாக பார்த்து கொண்டார்கள்.

நேரில் கண்ட சிறுவன் விதர்சன் மகிழ்ச்சி

என் பையனை கிட்ட வைத்து கொடியேற்றுவதை பார்க்க வைத்தார்கள். மிகவும் மகிழ்ச்சி. என் பையனின் ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகுந்த கவனம் பெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.