அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர வேண்டுமா? உயர் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவது தொடர்பாகவும், முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாகவும் தமிழ்நாடு உயர் கல்வித்துறை முக்கிய இரு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இளநிலை பட்டபடிப்பு மாணவர் சேர்க்கை!

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24ஆம் ஆண்டிற்கான நடப்பு கல்வி ஆண்டில் இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை சேர்க்கை முடிவடைந்தது.

இந்நிலையில், மேலும் சில அரசு கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள சில பாடப் பிரிவுகளுக்கு, நேரடி மாணவர்கள் சேர்க்கை அந்த கல்லூரிகளில் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கல்லூரிகளில் இணையலாம். நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை தெரிந்துகொள்வதற்கு இனையதள முகவரியும் அளிக்கப்பட்டுள்ளது.

www.tngasa.in என்ற இணையதளத்திற்கு சென்று ‘TNGASA2023-UG VACANCY’- என்ற பட்டியலுக்கு சென்று பார்வையிடலாம்.

காஞ்சிபுரத்தில் மாணவர்கள் போதை இல்லா தமிழ்நாடு எனும் உறுதி மொழியை ஏற்றனர்

முதுநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை!

முதுநிலை பட்டப்படிப்புகள் தொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் ஆண்டிற்கான முதுநிலை பட்டப் படிப்புகளில் முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கை ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாகவும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழக இளநிலை பாடப்பிரிவிற்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், முதுநிலை பட்டப் படிப்பிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.