இந்திய குடியுரிமை பெற்றார் அக் ஷய் குமார்| Akshay Kumar got Indian citizenship

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : கனடா குடியுரிமை தொடர்பாக, அடிக்கடி கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பாலிவுட் நடிகர் அக் ஷய் குமாருக்கு, நேற்று இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.

கடந்த 30 ஆண்டுகளாக ஹிந்தி திரையுலகில், கோலோச்சி வரும் அக் ஷய், 55, தமிழில், நடிகர் ரஜினியின் 2.0 படத்தில், வில்லனாக நடித்தவர்.

பஞ்சாபின் அமிர்தசரசில் பிறந்த இவர், கடந்த 2000ம் ஆண்டு, வட அமெரிக்க நாடான கனடாவின் குடியுரிமை பெற்றார்.

இதற்கிடையே, இந்திய குடியுரிமை வழங்கக் கோரி, 2019ல், மத்திய உள்துறை அமைச்சகத்திடம், நடிகர் அக் ஷய் குமார் விண்ணப்பித்தார்.

இந்நிலையில், நடிகர் அக் ஷய் குமாருக்கு இந்திய குடியுரிமை நேற்று வழங்கப்பட்டது. நாட்டின் 77வது சுதந்திர தினத்தன்று அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை, சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடிகர் அக் ஷய் குமார், இந்திய குடியுரிமை பெற்றதற்கான சான்றிதழையும் வெளியிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.