புதுச்சேரி தாகூர் அரசு கல்லுாரியில் தேசிய நுாலக தின விழா கொண்டாடப்பட்டது.
இந்திய நுாலக அறிவியலின் தந்தை ரங்கநாதனின் 121வது பிறந்த நாளையொட்டி, தேசிய நுாலக தின விழா நேற்று கல்லுாரியில் கொண்டாடப்பட்டது. நுாலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவ படத்திற்கு, கல்லுாரி முதல்வர் சசிகாந்த தாஸ் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், கல்லுாரி நுாலகர் தீபக், பேராசிரியர்கள், நுாலக அலுவலக ஊழியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement