நடப்பாண்டு ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 20ல் தொடங்கி 31ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. குறிப்பாக கேரளா முழுவதும் திருவிழா கோலமாக காட்சியளிக்கும். தமிழகத்தில் வாழும் கேரளா மக்களும் சிறப்பாக கொண்டாடுவர். இவர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் ஒன்றை அறிவித்துள்ளது. 06071 என்ற எண் கொண்ட நாகர்கோவில் – பன்வெல் ஓணம் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 22, 29, செப்டம்பர் 5 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
ஓணம் சிறப்பு ரயில்காலை 11.35 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் இரவு 10.45 மணிக்கு பன்வெல்லை சென்றடையும். மறுமார்க்கத்தில் 06072 என்ற எண் கொண்ட பன்வெல் – நாகர்கோவில் ஓணம் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 24, 31, செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். நள்ளிரவு 12.10 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 10 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும்.முன்பதிவு தொடக்கம்இந்த ரயிலில் ஏசி டூ டயர் பெட்டி 1, ஏசி த்ரி டயர் பெட்டிகள் 5, ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள் 11, ஜெனரல் செகண்ட் கிளாஸ் பெட்டிகள் 2, லக்கேஜ் மற்றும் பிரேக் வேன்கள் 2 ஆகிய பெட்டிகள் இடம்பெற்றிருக்கும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக முன்பதிவு நடைபெற்று வருகிறது.
வேளாங்கண்ணி திருவிழா சிறப்பு ரயில்இதையடுத்து அன்னை வேளாங்கண்ணி கோயில் திருவிழா ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறும். இதையொட்டி தமிழகத்தில் இருந்து கோவாவிற்கு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 07361 என்ற எண் கொண்ட வாஸ்கோ ட காமா – வேளாங்கண்ணி சிறப்பு கட்டண ரயில் ஆகஸ்ட் 27, செப்டம்பர் 1, செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு மூன்றாவது நாள் அதிகாலை 3.50 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும்.
தெற்கு ரயில்வே அறிவிப்புமறுமார்க்கத்தில் 07362 என்ற எண் கொண்ட வேளாங்கண்ணி – வாஸ்கோ ட காமா சிறப்பு கட்டண ரயில் ஆகஸ்ட் 30, செப்டம்பர் 4, 9 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். அதிகாலை 1.20 மணிக்கு புறப்பட்டு மூன்றாவது நாள் காலை 8 மணிக்கு வாஸ்கோ ட காமா சென்றடையும். இந்த ரயிலில் ஏசி டூ டயர் பெட்டி 1, ஏசி த்ரி டயர் பெட்டிகள் 7, ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள் 8, செகண்ட் கிளாஸ் பெட்டிகள் 2 இடம்பெறும்.
தென் மாவட்ட பயணிகளுக்கு வசதிஇந்த ரயிலுக்கான முன்பதிவு நேற்று காலை தொடங்கியது. வேளாங்கண்ணி – வாஸ்கோ ட காமா சிறப்பு ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், பெங்களூரு வழியாக பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தென் தமிழகத்தை சேர்ந்த பயணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் எனத் தெரிகிறது.
விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்மேலும் செப்டம்பர் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை ஒட்டி 09057 / 09058 என்ற எண் கொண்ட உத்னா – மங்களூரு ஜங்ஷன் – உத்னா வாராந்திர சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பை மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. உத்னா – மங்களூரு ஜங்ஷன் ரயில் செப்டம்பர் 13, 20, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
கர்நாடகா டூ மகாராஷ்டிராஇரவு 8 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் மாலை 6.30 மணிக்கு மங்களூருவை சென்றடையும். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 14, 21, 28 ஆகிய தேதிகளில் ரயில் இயக்கப்படும். இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் இரவு 8 மணிக்கு உத்னாவை வந்தடையும். இந்த ரயில் கர்நாடகா – மகாராஷ்டிரா இடையில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.