வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: யமுனை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக, யமுனை நதியின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவைத் தாண்டி உள்ளது.
யமுனை நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான, புதுடில்லி, ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக, கொட்டி தீர்த்த கனமழையால், யமுனை நதியின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவை தாண்டி உள்ளது. நேற்று மாலை 6:00 மணி நிலவரப்படி, யமுனை நதியின் நீர்மட்டம், 205.39 மீட்டராக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் பெய்த பருவமழையின்போது 208.66 மீட்டராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

யமுனை நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், புதுடில்லியின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வழிந்தோடியது. நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், புதுடில்லியின் பல்வேறு இடங்களில், குடிநீர் வினியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement