பாரிஸ் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர் தற்போது பிரான்சில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை 4-ம் நிலை வில்வித்தை போட்டியின் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர். எனவே இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் உறுதியாகி உள்ளன. இதில் ஆண்கள் அணிகள் பிரிவில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியாவின் ஒஜாஸ் தியோடெல், பிரத மேஷ் ஜவகர், […]
