ஓணம் சிறப்பு ரயில் – தென் மாவட்ட மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. நாளை முன்பதிவு!

ஒணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை தாம்பரத்தில் இருந்து கேரளாவின் கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பொங்கல் திருவிழாவைப் போல கேரள மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். 10 நாட்கள் வரை கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையில் கடைசி நாளான திருவோணம் நட்சத்திரத்தில் மகாபலி மக்களை சந்திக்க வருகிறார் என்பது அவர்களது நம்பிக்கை. புத்தாடை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஓணம் பண்டிகைக்காக சென்னை உள்பட அண்டை மாநிலங்களில் பணியாற்றும் கேரள மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். தீபாவளி, பொங்கல் பண்டிகை போன்றே ஓணம் பண்டிகைக்கு மக்கள் ஊருக்கு செல்லவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் ஓணம் சிறப்பு ரயில் முன்பதிவு தொடர்பாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
திருச்சியில் விரைவில் வரப்போகுது மெட்ரோ – மேயர் அன்பழகன் சொன்ன அப்டேட் இதோ

அதில், “”ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து ஆகஸ்ட் 26ம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் ஓணம் சிறப்பு ரயில் தென் மாவட்டங்கள் வழியே பயணித்து திருவனந்தபுரம் வழியாக கொச்சுவேலிக்கு ஆகஸ்ட் 27 காலை 8 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கமாக கொச்சுவேலியில் இருந்து ஆகஸ்ட் 27ம் தேதி காலை 11.40 மணிக்கு கிளம்பும் ரயில் மறுநாள் அதிகாலை 2.45 (ஆகஸ்ட் 28) தாம்பரம் வந்தடையும்” என்று குறிப்பிட்டுள்ளது. சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

ஐஆர்சிடிசி தளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். சிறப்பு ரயில் தொடர்பான அறிவிப்பு சொந்த ஊர் செல்லும் தென் மாவட்ட மக்களுக்கும், தமிழ்நாட்டில் பணியாற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.