வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பில்கிஸ் பானு வழக்கில் பலாத்கார குற்றவாளிகள் முன்கூட்டி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியான கேள்வி எழுப்பியது.
குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்தில், பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி, கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார்.அவரது குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் படுகொலை செய்யப் பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கு 2008ல் ஆயுள் தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 11 பேரும் கடந்தாண்டு சுந்திர தினத்தையொட்டி குஜராத் அரசால் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து சுபாஷினி அலி உட்பட சிலர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
![]() |
இதற்கு குஜராத் அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘குற்றவாளிகள் 11 பேரும் 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்துள்ளதால், 1992ம் ஆண்டின் தண்டனை குறைப்பு கொள்கையின் அடிப்படையில், நன்னடத்தை காரணமாக அவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டு அனுமதியும் பெறப்பட்டுள்ளதாகவும், சில தீர்ப்புகளை பொய்யான அறிக்கையாக குஜராத் அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
வழக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் நாகரத்னா, உஜ்ஜால் புயான் ஆகியோர் விசாரணை நடத்தினர்.அப்போது நீதிபகள் கூறியது,
குற்றவாளிகளின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில் 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அவர்கள் எந்த விதிகளின்படி ,எப்படி விடுதலை செய்யப்பட்டனர். 1992 தண்டனை குறைப்பு கொள்கை எவ்வளவு தூரம் மற்ற கைதிகளுக்குப் பயன்பட்டது.? இது எவ்வளவு தூரம் செயல்படுத்தப்படுகிறது? இது சம்பந்தமான தெளிவான தகவல்களை தர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறி விசாரணையை ஆக. 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement