“ஹிந்து மதம் முஸ்லிம் மதத்தை விட மிக பழமையானது “- குலாம்நபி ஆசாத் பேச்சு| Ghulam Nabi Azad courts controversy, says, All were Hindus before, became Muslims after converting

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜம்மு: இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களே, இந்தியாவில் ஹிந்துயிசமே மிக பழமையானது. கன்வர்ட் ஆன பின்பே முஸ்லிம்கள் அதிகம் உருவாகினர் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் தோடா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசியதாவது: ஹிந்துயிசம் , ஹிந்து மதம் முஸ்லிம் மதத்தை விட மிக பழமையானது. இந்தியாவில் பிறக்கும் போது அனைவரும் ஹிந்துக்களாகவே பிறந்தனர். 600 ஆண்டுகளுக்கு முன்னர் காஷ்மீரில் முஸ்லிம்களே கிடையாது. பண்டிட்டுகளே இஸ்லாமியர்களாக மாறினர்.

பார்லி.,யில் ஒரு எம்பி பேசும் போது பலர் வெளியில் இருந்து இந்தியாவுக்குள் வந்தவர்கள் என பேசினார். ஆனால் நான் அதனை மறுத்தேன். யாரும் வெளியில் இருந்து வந்தவர்கள் அல்ல. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் முஸ்லிம்கள் 1,500 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் வந்தனர்.

இந்தியாவில் முகலாயர்கள் காலத்தில் இவர்களின் ராணுவ படையில் இருந்தவர்கள் வெளியில் இருந்து இங்கு வந்திருக்க வேண்டும். பழமையான ஹிந்துக்கள் சிலர் முஸ்லிமாக மதம் மாறியிருக்கலாம். இது போன்ற நடந்தமைக்கு காஷ்மீரே எடுத்துக்காட்டு.
ஹிந்துக்களுக்காகவும், இஸ்லாமியர்களுக்காகவும், தலித் , மற்றும் காஷ்மீரிகளுக்காகவும் இந்த மாநிலத்தில் அனைவரும் உழைப்போம்.
இவ்வாறு குலாம் நபி பேசியுள்ளார்.
இவர் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் பரவலாக பலரும் பகிர்ந்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.