சந்தன கடத்தல் வீரப்பன் வேட்டை பற்றிய ஆவணப் படம் ஓடிடியில் வெளியீடு

சந்தன கடத்தல் வீரப்பனின் கடைசி 10 ஆண்டுகள் பற்றி நெட்பிளிக்ஸ் தளத்தில் 'தி ஹண்ட் பார் வீரப்பன்' என்ற வெப் தொடர் வெளியாகி ரவேற்பை பெற்றுள்ளது. வீரப்பன் குறித்து ஏராளமான ஆவணப்பபடங்கள், குறும்படங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் வந்திருக்கிறது. அவற்றில் முக்கியமானது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சந்தனகாடு' என்ற தொடர். இதனை வ.கவுதம் இயக்கி இருந்தார். வீரப்பனாக காரேத்தா ராஜா நடித்தார்.

கன்னட இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தமிழில் 'வனயுத்தம்' என்ற பெயரில் படம் எடுத்தார். இதே படத்தை கன்னடத்தில் 'வீரப்பன் அட்டகாசா' என்ற பெயரில் வெளியிட்டார். இதில் வீரப்பனாக கிஷோர் நடித்திருந்தார்.

தற்போது வெளியாகி உள்ள 'தி ஹண்ட் பார் வீரப்பன்' தொடர் 1990 முதல் 2004ல் வீரப்பன் கொல்லப்பட்டது வரை நடந்த நிகழ்வுகளை சொல்கிறது. வீரப்பன் சார்பு நியாயத்தை அவரது மனைவி முத்து லட்சுமி பேசுகிறார். போலீஸ் தரப்பு நியாயத்தை அப்போது பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் பேசுகிறார்கள். சம்பவங்கள் நடந்த இடத்தை அப்படியே படம் பிடித்துள்ளனர். மற்றவற்றுக்கு அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தி உள்ளனர். வீரப்பன் வேட்டையில் உண்மையில் நடந்தது என்ன? என்பதை தகுந்த ஆதாரங்களுடன் இந்த ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தி உள்ளனர். இதனை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.