வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தெலுங்கானாவில் இன்று முதல் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழைதென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பலத்த மழை பெய்துள்ளது. குறிப்பாக ஹிமாச்சல் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. ஹிமாச்சல் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.நிலச்சரிவு – பலிஇதனால் ஏராளமான வீடுகள் புதைந்தன. 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால் ஹிமாச்சல பிரதேச அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் மகாராஷ்ரா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களிலும் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் ஏற்படுத்தியுள்ளது. ஒரே டிக்கெட்தான்… உலகம் முழுக்க பறக்கலாம்… ஐக்கிய அரபு அமீரகத்தின் அசத்தல் பிளான்!
வரலாறு காணாத மழை
வடமாநிலங்களில் கொட்டிய பேய் மழையால் டெல்லி யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தலை நகரின் பல பகுதிகளை மூழ்கடித்தது. இதேபோல் தெலுங்கானா மாநிலத்திலும் கடந்த மாதம் வரலாறு காணாத மழை பெய்தது. குறிப்பாக ஜெய்சங்கர் பூபாலப்பள்ளி மற்றும் முலுகு ஆகிய மாவட்டங்களில் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் தலா 60 சென்டி மீட்டருக்கு மேல் மழை கொட்டியது.மீண்டும் கனமழை எச்சரிக்கைஇதேபோல் தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் பல பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்ததில் ஊரே வெள்ளக்காடானது. 30க்கும் மேற்பட்டோர் பலியாயினர். ஏராளமான விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாயின. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்திற்கு தற்போது மீண்டும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மகளோடு கொஞ்சி விளையாடும் ஷ்ரேயா… கலக்கல் புகைப்படங்கள்!காற்றழுத்த தாழ்வு பகுதிவங்கக்கடலின் வடமேற்கு பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது. இதன் காரணமாக, தெலுங்கானா மாநிலத்தின் பல பகுதிகளில் முக்கியமாக வடக்கு மற்றும் கிழக்கு தெலுங்கானாவுக்கு இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.22ஆம் தேதி வரைஆசிபாபாத், மஞ்சேரியல், பெத்தபள்ளி, பூபாலப்பள்ளி, முலுகு, வாரங்கல், ஹன்மகொண்டா, மஹ்பூபாபாத், கொத்தகுடெம் ஆகிய இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஹைதராபாத் மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் உட்பட மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 22ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.