டெல்லி அருகில் உள்ள குர்காவ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி (22). இவர் சந்தீப் என்பவரை கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஆனால் அவர்கள் இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள். எனவே அவர்களது திருமணத்திற்கு அஞ்சலியின் பெற்றோர் அனுமதிக்கவில்லை. ஆனால் அஞ்சலி தனது முடிவில் உறுதியாக இருந்தார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு அஞ்சலி தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட தங்களது மகள் மீது அஞ்சலியின் பெற்றோர் தொடர்ந்து கடுங்கோபத்தில் இருந்தனர். அஞ்சலியின் கணவர் பஃப் ஒன்றில் வேலை செய்து வந்தார்.
கடந்த சில நாள்களாக அஞ்சலியின் பெற்றோர் அடிக்கடி அஞ்சலி வீட்டிற்கு வந்து சென்றனர். இந்த நிலையில் அஞ்சலியின் கணவர் சந்தீப் தனது சகோதரியின் வீட்டில் ஏதோ மதச்சடங்கு இருப்பதாக கூறி புறப்பட்டு சென்றார். அவர் புறப்பட்டு வெளியூர் சென்றிருந்த போது அவருக்கு அஞ்சலியின் சொந்த ஊரான சுர்ஹதியை சேர்ந்த ஒருவர் சந்திப்பிற்கு போன் செய்து அஞ்சலி இறந்துவிட்டதாகவும், அவரது உடலை தகனம் செய்ய சுர்ஹதிக்கு கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்தீப் உடனே புறப்பட்டு தனது வீட்டிற்கு வந்தார்.

ஆனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது. உள்ளே திறந்து பார்த்த போது ஆடைகள் அனைத்தும் கலைந்து கிடந்தது. அதன் பிறகு விசாரித்த போதுதான் அஞ்சலி கொலைசெய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து உடனே அஞ்சலியின் பெற்றோர் குல்தீப், ரிங்கி மற்றும் அவர்களின் மகன் குணால் ஆகியோர் மீது போலீஸில் புகார் செய்தார். இந்த வழக்கின் அனைத்து ஆதாரங்களையும் அழிக்க அஞ்சலியின் உடலை அவர்களின் பெற்றோர் அந்த கிராமத்திலேயே எரித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து உதவி போலீஸ் கமிஷனர் வருண், “அஞ்சலி வீட்டில் தனியாக இருந்த போது அவரது பெற்றோரும், சகோதரரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலைசெய்திருக்கின்றனர். அவர்கள் உடலை தோளில் சுமந்து சென்று கட்டடத்துக்கு வெளியில் நின்ற காரில் போட்டு சொந்த ஊருக்கு எடுத்து சென்று அவசர அவசரமாக எரித்திருக்கின்றனர். அவர்கள் மூன்று பேரும் கைதுசெய்யப்பட்டு, மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs